கிரகணத்தின் போது செங்குத்தாக நின்ற உலக்கை..! முன்னோர்கள் சொன்ன ஆச்சர்யம்..! 

பொதுவாகவே கிரகணத்தின் போது கர்ப்பிணிகள் வெளியே வரக்கூடாது; குழந்தைகள் வெளியில் செல்லக்கூடாது; கிரகணத்திற்கு முன்பாக உண்ண வேண்டும்; பிறகு கிரகணம் முடிந்த பிறகு குளித்துவிட்டு உண்ணவேண்டும்; மாலை நேரத்தில் தர்ப்பணம் செய்யவேண்டும்; வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்... இது போன்று பல விஷயங்கள் நம் முன்னோர்கள் சொல்ல கேட்டிருப்போம்.

இன்றைய நிலையில் என்னதான் அறிவியல் பூர்வமாக விஞ்ஞானிகள் கிரகணத்தின் போது மக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என சொல்லி இருந்தாலும் ஆணித்தரமாக அதனை கூறிவிட முடியாது. காரணம் அன்றைய காலகட்டத்திலேயே கிரகணத்தின் போது மிக எளிதாகத் தெரிந்து கொள்வதற்கு நம் முன்னோர்கள் சொன்ன ஒரு விஷயம் மிகப்பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தும். இன்றளவும் அது போன்ற ஆச்சரியங்களை நாம் பார்க்க முடிகிறது. 

அதாவது கிரகணத்தின்போது பித்தளை தட்டில் தண்ணீர் ஊற்றி அல்லது மஞ்சள் தண்ணீர் ஊற்றி அதில் உலக்கையை நிற்க வைப்பார்கள். எந்த ஒரு பிடிமானமும் இன்றி உலக்கை நேராக நிற்கும். அதாவது கிரகணத்தின் போது புவியீர்ப்பு விசை அதிகமாக இருக்கும் காரணத்தினால் எந்த ஒரு பிடிமானமும் இன்றி உலக்கை நேராக நிற்கும். கிரகணம் விடும் போது புவியீர்ப்பு விசை குறைய தொடங்கும். அப்போது தானாக கீழே சரிந்துவிடும். இதிலிருந்தே நம் முன்னோர்கள் மிக எளிதாக தெரிந்து கொண்டனர் கிரகணம் பிடித்த நேரமும் கிரகணம் விடும் நேரமும்.

ஆனால் இன்று நாம் விஞ்ஞானம் உயர்ந்துவிட்ட நிலையில் பைனாகுலர், டெலஸ்கோப், அதற்கெனவே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ள கண்ணாடிகள் கொண்டு கிரகணத்தை பார்க்க பார்க்கிறோம். இவையெல்லாம் இருந்தாலுமே கூட நம் முன்னோர்கள் சொன்ன எந்த ஒரு விஷயம் என்றும் ஆச்சரியமாகத்தான் பார்க்கப்படும் என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் கிடையாது