நந்தனத்தில் நாயுடன் சில்மிஷம்.! 

கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவுக்கு சென்னை நந்தனம் பகுதியில் வாலிபர் ஒருவர் ஒரு நாயுடன் தகாத உறவு கொண்டு துன்புறுத்திய சிசிடிவி காட்சி சிக்கி உள்ளது.

சென்னை மவுண்ட் ரோடு நந்தனம் பகுதியில், கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று பிறந்த நாள் கொண்டாட தன் வீட்டின் மாடிக்கு வந்துள்ளனர் ஒரு குடும்பத்தினர். அப்போது எதிர்பாராத விதமாக கண்ணில் பட்ட காட்சி தான், அந்த வாலிபரின் தகாத செயல். அப்போது வீட்டின் அருகில் நின்று கொண்டிருந்த காரின் பின்புறம் சென்று, ஒரு நாயுடன் தகாத உறவில் ஈடுபட்டு நாயை கொடுமை செய்து உள்ளார். பின்னர் இது குறித்து விலங்கு நல வாரியத்திற்கு தெரியப்படுத்தப்பட்டு உள்ளது.

மேலும், சைதாப்பேட்டை காவல் நிலையத்திற்கு போன் செய்து, இது குறித்த விவரம் தெரிவிக்கவே விரைந்து வந்த போலீசார், அருகில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி காட்சியை ஆராய்ந்து நடந்த சம்பவத்தை உறுதி படுத்தியுள்ளது. 

விசாரணையிலோ, அந்த நபர் 22 வயது மதிக்கப்பதக்க நீலகண்டன் என்றும், அவர் அதே பகுதியில் டீ கடையில் வேலை செய்து வருவர் என்றும் தெரியவந்துள்ளது. இருந்தாலும், இது குறித்த விசாரணையை தீவிரபடுத்தியுள்ளது போலீசார்.