a man tried to take selfie in front of train

ஓடும் ரயிலின் முன் செல்பி வீடியோ எடுக்க முயன்ற இளைஞர் மீது ரயில் மோதி பலத்த காயம் அடைந்துள்ளார்.

ரயில் வேகமாக வருவதை பார்த்த அந்த வாலிபர் ஒரு ஜாலிக்காக, ரயில் முன் செல்பி கேமராவை ஆன் செய்து சிரித்தவாறு போஸ் கொடுக்க முயன்றார் 

அப்போது மிக அருகில் நெருங்கி வந்த ரயிலை பார்க்காமலும், செல்பி எடுக்கும் போது எவ்வளவு இடைவெளி இருக்க வேண்டும் என்பதையும் கவனிக்காமல்,இருந்தார்

அப்போது, ரயில் மிக அருகில் வரும் போது, செல்பி மோகத்தில் ஊறி இருந்த அந்த நபர் மீது மோதவே,அவர் தலையில் பலத்த அடிபட்டு,தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப் பட்டு உள்ளார்

இந்தச் சம்பவம் குறித்து, ரயில்வே போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

செல்பி மோகம் உயிரை பறிகிறது என எத்தனை முறை சொல்லி வந்தாலும், இன்றளவும் செல்பி மோகத்தால் பலரும் இது போன்று இறக்கின்றனர்.