சீனாவில் வங்கி ஏடிஎம் இல் ஒரு பெண் பணம் எடுத்துள்ளார். அப்போது அவரிடமிருந்த பணத்தை மிரட்டி வாங்கிக்கொண்டு, மீதமுள்ள பணத்தையும் எடுக்க சொல்லி மிரட்டி உள்ளார் ஒரு நபர். அதற்கு பின் நடந்த விஷயம் தான் இங்கே சுவாரஸ்யமே....!

சீனாவின், ஹேயூஹான் நகரில் உள்ள ஐசிபிசி வங்கி ஏடிஎம்மில் லீ என்ற பெண் பணம் எடுத்துள்ளார். அப்போது திடீரென உள்நுழைந்த ஒரு நபர் அந்த பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டி, கையில் இருந்த பணத்தை பிடுங்கி உள்ளார். மேலும், வங்கி கணக்கில் லீ வைத்திருந்த மீதமுள்ள அனைத்து பணமும் எடுக்க சொல்லி மிரட்டி உள்ளார். 

லீ உடனே அதற்கும் சரி என சொல்லி, பணத்தை எடுக்க முற்பட்ட போது, அவரது வங்கி கணக்கில் பணமே இல்லை என்று மெசேஜ் காண்பித்து உள்ளது.

அதனை பார்த்து திருட வந்த திருடன் உடனே மனம் மாறி லீ இடம் இருந்து பறித்து வைத்திருந்த அந்த பணத்தையும் அவரிடமே கொடுத்துவிட்டு சாரி சொல்லி ஒரு புன்னகை காண்பித்து வெளியே சென்று உள்ளார். இந்த அனைத்து நிகழ்வும் அப்படியே வீடியோவில் பதிவாகி உள்ளதால், இந்த வீடியோ தற்போது வெளியிட்டு உள்ளனர்.

மேலும் சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இந்த வீடியோவை பார்க்கும் பலரும், இவர் மிகவும் நல்ல திருடனாக உள்ளார் என்றும், இளகிய மனம் கொண்ட நபராக உள்ளார் என்றும் பாராட்டி வருகின்றனர். ஒரு சிலர் மட்டுமே அந்த நபருக்கு எதிராக கருத்து தெரிவித்து உள்ளனர். கடந்த 16 ஆம் தேதி நடைபெற்ற இந்த சம்பவத்திற்கு பிறகு தற்போது அந்த நபரை போலீசார் கைது செய்து உள்ளனர்.