இரவு 10.45 மணிக்கு கைய பிடிச்சு இழுத்த வாலிபர்..! பிறகு நடந்த கூத்து.. அய்யய்யோ.. 

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள சர்வே என்ற பகுதியில் பெண் ஒருவர் இரவு 10.45 மணிக்கு தனியாக சாலையில் சென்று கொண்டிருந்த போது, அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தில் வந்த ஒரு நபர் அந்த பெண்ணிடம் சில்மிஷம் செய்ய முயன்றுள்ளார்.

அப்போது செய்வதறியாது தவித்த அந்த பெண் ஓடி சென்று அந்த நபரின் பைக்கில் ஏறி அமர்ந்துள்ளார். பின்னர் அவரின் தலை முடியை பிடித்து ஆத்திரம் தீர பலத்த அடி உதை கொடுத்து உள்ளார். இதில் நிலைகுலைந்த அந்த நபர் வேறு வழி இல்லாமல் இரு சக்கர வாகனத்தை நிறுத்தி கீழே இறங்கி உள்ளார். பின்னர் இந்த பெண் மீண்டும் அந்த நபரை வெளுத்து வாங்கியதில் சோர்வு அடைந்துள்ளார் அந்த இளைஞன். 

பின்னர் இவரை பிடித்து அருகில் உள்ள போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இந்த நபரை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை செய்து வருகின்றனர். மேலும் இரவில் தனியாக சென்ற பெண்ணின் சாதுர்த்தியதை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.