லண்டனில் நாடாளுமன்ற பெண் உறுப்பினர் ஒருவர் பேருந்தில் பட்டணம் செய்யும்  பொது, அவரை பார்த்து ஒரு நபர் ஆபாச செயலில் ஈடுபட்டு உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நாஸ் ஷா என்ற இவர் பாகிஸ்தான் வம்சாவளி வந்த பெண் எம்.பி என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தொழிலாளர் கட்சித் தலைவருமாகவும் உள்ளார். 

இவர் அந்த ஒரு குறிப்பிட்ட நாளில் பேருந்தில் பயணம் செய்ய விருப்பப்பட்டு சென்றுள்ளார். அப்போது யாரும் எதிர்பாராத வண்ணம் பேருந்தில் உடன் பயணித்த ஒரு மர்ம நபர் பெண் எம் பி யை பார்த்து ரசித்தபடியே தகாத செயலில் ஆபாசமாக ஈடுபட்டு உள்ளார். இதனைக் கண்டு கோபமடைந்த நாஸ் ஷா பேருந்து ஓட்டுனரிடம் இதனை தெரிவித்துள்ளார். அதற்குள் அந்த நபர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

இதுகுறித்து மத்திய லண்டனில் உள்ள ஒயிட்ஹால் போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து தவறான செயலில் ஈடுபட்ட அந்த நபர் யார் என்று தீவிரமாக தேடி வருகின்றனர்.