சகோதரி என தெரியாமலேயே..."காதலித்து திருமணம்"..இப்ப குழந்தை...! பதறும் இளைஞன்..! 

தன்னுடைய காதல் மனைவி ஒருவிதத்தில் தனக்கு சகோதரி என்பதை மரபணு சோதனை மூலம்  உறுதி  செய்து கொண்டதால் பெரும் குழப்பத்திற்கு ஆளாகியுள்ளார் இங்கிலாந்தை சேர்ந்த 24 வயது மதிக்கத்தக்க ஓர் இளைஞர்.

இவர் ரெட்டிட் என்ற சமூக வலைத்தள பக்கத்தில் ஓர் பதிவை பகிர்ந்துள்ளார். அதில், "எனக்கு காதல் திருமணம். தற்போது என் மனைவி கர்ப்பமாக உள்ளார். இந்த நிலையில் எனக்கும் என்னுடைய காதல் மனைவிக்கும் தந்தை ஒரே ஒரு நபர்தான் என தெரியவந்துள்ளது. அந்த வகையில் அவர் எனக்கு சகோதரி முறை. நாங்கள் 8 ஆண்டுகளாக காதலித்து இந்த ஆண்டு தான் திருமணம் செய்து கொண்டோம். வரும் மார்ச் மாதத்தில் குழந்தை பிறக்க உள்ளது. என் மனைவியின் அம்மாவும் என் அம்மாவும் தந்தையைப் பற்றி தெரிவித்ததே கிடையாது. என் தந்தையும் எங்களுடன் இல்லாததால் விவரம் தெரியவில்லை.

எனவே பிறக்கப் போகும் குழந்தைக்கு ஏதாவது பாதிப்பு ஏற்படுமா என்ற சந்தேகம் இப்போது எங்களுக்குள் எழுந்துள்ளது.  என்ன செய்வது என்று தெரியவில்லை. உங்களுடைய ஆலோசனை தேவை என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், எனக்கும் என் மனைவிக்கும் உணர்வில் எந்தவிதமான மாற்றமும் ஏற்படவில்லை. நாங்கள் பிரிய மாட்டோம் என பதிவு செய்துள்ளார். இதற்கு பல்வேறு தரப்பினர் அவர்களது பல்வேறு கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். அதில் ஒரு சிலர் நீங்கள் அன்பாக வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள். அப்படியே தொடருங்கள். நீங்கள் எதையும் தெரிந்து செய்யவில்லை இதைப் பற்றி வெளியில் யாரிடமும் சொல்லாதீர்கள் என தெரிவித்துள்ளனர்.