துருக்கி நாட்டில் உள்ள ஒஸ்மானியே என்ற பகுதியில் திடீரென அதிக காற்று வீசி உள்ளது அப்போது, ஒரு உணவகத்தின் அருகில் வைக்கப்பட்டிருந்த நிழற்குடை ஒன்று கீழே விழும் தருவாயில் அங்கிருந்த ஒரு நபர் ஓடி சென்று, அதனை பிடிக்க முயன்ற போது, குடையுடன் அப்படியே மேலே பறந்தார்.

நிழற்குடையுடன் சுமார் ஐந்து மீட்டர் வரை மேலே பறந்த அவர், அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பின்னர். அவருக்கு எந்த காயமும் ஏற்பட வில்லை. ஆனால், அருகில் இருந்த மேலும் இருவருக்கு காயம் ஏற்பட்டு உள்ளது. ஒருவருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு உள்ளது 

இந்த காட்சியை கண்ட மற்றவர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். காரணம்.. அந்த அளவிற்கு காற்று வீசியதே.... இந்த நிகழ்வு அடங்கிய வீடியோ காட்சி தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.