கழுதை மேய்த்து கோடியில் சம்பாதிக்கும் கேரள இளைஞர்..! ஒரு லிட்டர் பால் 5 ஆயிரம்..! 

வேலையை உதறி தள்ளிவிட்டு, கழுதை பண்ணை வைத்து, அதன் மூலம் பல கோடி ரூபாயை சம்பாதித்து வரும் இளைஞர் பற்றிய விவரம் இந்த பதிவில் பார்க்கலாம்.

கேரள மாநிலம், எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள கிராம மங்களம்  என்ற ஊரில் வசித்து வரும்அபே பேபீ என்பவர் MBA பட்டதாரி. பெங்களூரில் 50 ஆயிரம் ரூபாய் மாத வருமானம் பெற்று வந்த இவருக்கு தன் சொந்த ஊரான கேரளாவிற்கு சென்று சொந்தமாக கழுதை பண்ணை வைக்க ஆசை வந்துள்ளது. காரணம், ஒரு நாள் பைபிள் படித்து கொண்டிருக்கும் போது, அதில் குதிரைக்கு பதிலாக ஏன் இயேசு கழுதை மேய்த்தார் என்ற கேள்வி எழுந்தது.

இதே போன்று கிளியோ பாட்ரா தனது அழகை பாதுகாக்க கழுதை பால் பயன்படுத்தி இருந்தார் என்ற விவரத்தை ஒரு நூலில் இருந்து படிக்கும் போது மேலும் இவருக்கு கழுதை பால் வியாபாரம் மற்றும் இதிலிருந்து தயாரிக்கப்படும் அழகு சாதன பொருட்கள் தயாரிக்க திட்டமிட்டு உள்ளார்.

அதன்படி, தன் சொந்த ஊரில் உள்ள 2 ஏக்கர் நிலத்தில் 32 கழுதைகளுடன் வியாபாரத்தை தொடங்கினார். பின்னர் அதில் 15  கழுதை நோய்வாய்ப்பட்டு இறந்து உள்ளது. இருந்த போதிலும் மன தைரியத்துடன் மீண்டும் பல கழுதைகளை வாங்கி வளர்க்க தொடங்கி உள்ளார். இவருடைய  நடவடிக்கையை பார்த்து அக்கம் பக்கத்தினர் வீடு தேடி வந்து கிண்டல் செய்துவிட்டு செல்வார்களாம். ஆனால் தற்போது இவரை வீடி தேடி வந்து வாழ்த்திவிட்டு செல்கின்றனர். 

கழுதை பால் ஒரு லிட்டர் ரூ.5000 ஆயிரம் வரை விறக்கப்டுகிறது. மேலும் கழுதை பாலில் இருந்து அழகு சாதன பொருட்கள் தயாரித்து, விற்பனை செய்து வருகிறார். பேசிஷியல் கிட் குறைந்தபட்சம் ரூ.2000 ஆயிரத்தில் இருந்து விற்கப்படுகிறது.

பொதுவாகவே, நாம் யாரையாவது திட்டுவது என்றால் கழுதை மேய்க்க தான் லாயக்கி என சொல்வோம். ஆனால் இன்று கழுதை மேய்த்தால் பல கோடிகளில் செல்வம் ஈட்டலாம் என்பதை நிரூபித்து உள்ளார் .