மிக்சிங் இல்லை... சைடிஸ் இல்லை... 4 குவாட்டர்களை கல்ப்பாக அடித்த வாலிபர்... 8 காலில் இறுதிப்பயணம்..! உஷார்..! 

உத்தர பிரதேச மாநிலத்தில் உகான்பூர் என்ற கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திர சிங் இவர் மது அருந்தும் பழக்கம் கொண்டவர். இந்த நிலையில் தனது உறவினரான பிரதீப் என்பவரின் வீட்டிற்கு சென்றுள்ளார்.

அப்போது இருவரும் ஒன்றாக சேர்ந்து மது குடிப்பதில் போட்டி வைத்துக் கொள்ளலாம் என முடிவு செய்து உள்ளனர். அதன்படி வெறும் இருபது நிமிடத்திற்குள் 4 குவார்ட்டர் பாட்டில்களை யார் முதலில் குடிக்கிறார்களோ அவர்தான் வெற்றியாளர் என்றும், தோல்வி அடைந்தால் இரண்டு பேருக்கும் சேர்த்து தலா 4 குவார்ட்டர் பாட்டில் வீதம்  8 குவார்ட்டர் பாட்டில்களை அவரது பணத்தில் வாங்கிக் கொடுக்க வேண்டும் என முடிவு செய்தனர்.

அதன்படி போட்டி ஆரம்பித்த பத்து நிமிடத்திலேயே ராஜேந்திர சிங் 4 பாட்டிலையும் தண்ணீர் உள்ளிட்ட எந்தப் பானமும் கலக்காமல் ராவாக அடித்து உள்ளார். பின்னர் வெற்றி பெற்ற கையேடு மிகுந்த உற்சாகத்துடன் வீட்டிற்கு வந்த அவர் அடுத்த ஒரு மணி நேரத்திலேயே ரத்த வாந்தி எடுத்து மயங்கி விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து அதிர்ச்சியடைந்த உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

விசாரணையில் இவர்கள் இருவரும் மது அருந்துவதில் போட்டி வைத்துக் கொண்டு வெறும் பத்து நிமிடத்தில் தண்ணீர்கூட சேர்க்காமல் மது அருந்திதும் இதன் காரணமாகவே அவர் இறந்துள்ளார் என்ற அதிர்ச்சி தகவலும் வெளிவந்துள்ளது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் ஒரு விதமான பரபரப்பு காணப்படுகிறது.