ஊரடங்கால் அம்மா வீட்டில் மாட்டிக்கொண்ட மனைவி..! "சைக்கிள் கேப்"பில் முன்னாள் காதலியை உஷார் செய்து திருமணம்!

கொரோனா  எதிரொலியால் எடுக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு தருணத்தில் தன் தாய் வீட்டிற்கு சென்ற மனைவி வீடு திரும்ப முடியாததால் தனக்கு கிடைத்த இடைப்பட்ட காலத்தை காலத்தில் தன்னுடைய முன்னாள் காதலியை திருமணம் செய்துள்ளார் வில்லங்கமான கணவர். இந்த தகவல் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

பலிகன்ச் மாவட்டம் பரத்பூராவை சேர்ந்த தீரஜ்குமார் என்பவருடைய மனைவி கடந்த சில வாரங்களுக்கு முன்பு தன் தாயை பார்க்க அவரது பிறந்த வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர் எதிர்பாராதவிதமாக கொரோனவால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதன் காரணமாக அந்த பெண்ணால் தன் தாய் வீட்டிலிருந்து கணவர் வீட்டிற்கு வர முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் தனது மனைவியை பரத்பூராவிற்கு  எப்படியாவது திரும்பி வா என தொடர்ந்து கேட்டுக் கொண்டு உள்ளார். ஆனால் ஊரடங்கு உத்தரவு இருப்பதால் வரமுடியவில்லை. 

இதன் காரணமாக உச்சக்கட்ட கோபத்தில் இருந்த தீரஜ், ரகுநாத்பூரில் வசித்துவந்த தன்னுடைய காதலியை இரண்டாவது திருமணம் செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த முதல் மனைவி துல்ஹான் பஜார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். முதல் மனைவி அளித்த புகாரின் அடிப்படையில் தீரஜ் குமாரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது. 

கொரோனா பரவல் காரணமாக அடுத்த நிமிடம் என்ன நடக்கப்போகிறது என சிந்தித்து கூட பார்க்க முடியாத நிலையில். தன் தாய் வீட்டிற்கு மனைவி சென்ற ஒரு சிறிய கால இடைவெளியில், அதுவும் ஊரடங்கு உத்தரவால் மட்டுமே திரும்பி கணவர் வீட்டிற்கு வர முடியாத ஒரு சூழலில், தனக்கு  கிடைத்த  இந்த  வாய்ப்பை "சைக்கிள் கேப்"- பில் முன்னாள் காதலியுடன் திருமணம் செய்துகொண்டு உல்லாசம் தேவைப்பட்டுள்ளது இந்த கணவருக்கு..!

ஆனால் முதல் மனைவி கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார், குற்றவாளி கணவருக்கு சரியான பாடம் புகட்டி உள்ளனராம். இந்த செய்தி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது