கடலில் மிதந்த அதிசய கடிதம்..! எழுதப்பட்ட ஆச்சரிய தகவல் என்ன தெரியுமா... ? 

50 ஆண்டுகளாக கடலில் மிதந்த ஒரு கடிதத்தை, வீசி எறிந்த அதே நபரிடம் மீண்டும் சென்றடைந்த சுவாரசிய விஷயத்தைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

கடந்த 50 ஆண்டுகளாக ஆஸ்திரேலியாவில் கடலில் மிதந்து இருந்த பாட்டில் ஒன்று, ஆஸ்திரேலியாவின் ஐரே  தீபகற்ப கடற்கரையில் எலியட் என்னும் சிறுவனுக்கு கிடைத்துள்ளது. அப்போது அந்த பாட்டிலை எடுத்து பிரித்துப் பார்த்த அந்த சிறுவன் அதில் எழுதப்பட்டிருந்த வசனத்தை பார்த்து ஆச்சரியப்பட்டு உள்ளான்.

அதாவது "இங்கிலாந்தில் இருந்து நாங்கள் மெல்போர்னியாவிற்கு செல்கிறோம்.. தற்போது கப்பலில் இருக்கிறேன்.. இந்த கடிதத்தை இந்த கப்பலில் இருந்து தான் எழுதுகிறேன்... பின்னாளில் யார் இந்த கடிதத்தை பெறுகிறார்களோ... அவர்கள் இந்த கடிதத்திற்கு பதில் அனுப்புங்கள்" என எழுதப்பட்டிருந்தது.

இந்த கடிதத்தை எழுதிய நபர் பெயர் கில்மோரா என குறிப்பிடப்பட்டிருந்தது. உடனே எலியட் கில்மோராவிற்கு கடிதம் எழுத நினைத்து அதற்கான வாய்ப்பினை தன் தந்தையிடம் கேட்டுள்ளார். பின்னர் இந்த லெட்டரை சமூக வலை தளத்தில் பதிவிட்டு இப்படி ஒரு விஷயத்தை வெளிப்படுத்தியபோது சமூகவலைதள வாசிகள் இந்த சுவாரஸ்ய விஷயத்தை தொடர்ந்து பகிர்ந்து வந்துள்ளனர்.

பின்னர் இந்த விஷயம் உரிய நபரான கில்மோராவிற்கு தெரியவந்தது. இதனை கண்டு மிகவும் மகிழ்ச்சியுற்று, இது குறித்து கருத்து தெரிவித்து உள்ளார். அப்போது, "விளையாட்டாக நான் எழுதி, கடலில் வீசி எறிந்தேன்"  மீண்டும் இந்த கடிதம் என்னிடமே வந்து சேர்ந்தது நினைத்து மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்" என தெரிவித்துள்ளார்.

கில்மோராவிற்கு தற்போது வயது 63. மேலும் அவர் ஆங்கில ஆசிரியராக இருந்து தற்போது ஓய்வு பெற்று தன் மனைவியுடன் பொழுதை கழித்து வருகிறார். இந்த தருணத்தில் இப்படி ஒரு நிகழ்வு நடந்துள்ளதால் அவருடைய மகிழ்ச்சிக்கு அளவே இல்லாமல் இருக்கின்றது. இந்த சுவாரஸ்ய சம்பவத்தைப் பற்றிய செய்தி தற்போது சமூக வலைத்தளத்தில் வெகுவாக பகிரப்பட்டு வருகிறது.