கோவை பெண் மூளை காய்ச்சலால் பலி ...! 

பீகார் மாநிலத்தில் தற்போது மூளைக் காய்ச்சலால் நூற்றுக்கும் மேற்பட்ட பச்சிளம் குழந்தைகள் மடிந்தனர்.இந்த  நிலையில் கோவையில் இளம்பெண் ஒருவரும் மூளைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இதுகுறித்து சுகாதாரத் துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். கோவை மாவட்டம் சரவணம்பட்டி அருகே உள்ள விநாயகபுரத்தை சேர்ந்தவர் சுரேஷ். இவருடைய மகள் ரம்யா. கடந்த சில நாட்களாக தீவிர காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வந்துள்ளார்.

இந்நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு  மருத்துவ பரிசோதனையில் அவருக்கு மூளைக்காய்ச்சல் இருப்பது என உறுதி செய்யப்பட்டது. இதற்கிடையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். ஏற்கனவே பீகார் மாநிலத்தில் மூளை காய்ச்சல் பல குழந்தைகள் உயிரிழந்த நிலையில், தமிழகத்தில் இதுபோன்ற சம்பவம் நடந்துள்ளதால் மக்கள் மத்தியில் ஒருவிதமான பீதி காணப்படுகிறது. எனவே சுகாதாரத் துறை விரைவில் இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.