ராக்கெட் வேகத்தில் மின்கம்பம் ஏறும் வீர தமிழச்சி..! 2 குழந்தைக்கு  தாய்... செம பிட்னஸ் உடம்பு.. அரசு வேலை..! குவியும் பாராட்டு ..! 

மின்கம்பம் ஏறும் பணிக்காக கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த ஜோதி என்பவர் தேர்வாகியுள்ள சம்பவம் அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.

இரு குழந்தைகளுக்கு தாயான இவர் மின்கம்பம் பழுதுபார்க்கும் பணிக்கு விண்ணப்பித்து இருந்துள்ளார். இவர் ஐடிஐ தொழிற்கல்வி டிப்ளமோ பட்டம் பெற்றவர். படித்து முடித்துவிட்டு திருமணம் முடிந்து தற்போது இரண்டு குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார். இவர் வீட்டையும் பார்த்துக்கொண்டு வேலைக்கும் செல்ல வேண்டும் என முடிவு எடுத்துள்ளார்.

அதன்படியே தான் படித்த படிப்பு தொடர்பான வேலையை தேர்வு செய்ய முடிவு செய்த போது மின்கம்பங்களில் ஏற்படும் பழுதுகளை நீக்குதல் போன்ற பணிகளுக்காக விண்ணப்பித்திருந்தார். இவர்களுக்கான உடற்பகுதி உடற்தகுதி தேர்வு நடைபெற்றது. இதில் பல்வேறு நபர்கள் கலந்து கொண்டாலும் மூன்று பெண்கள் மட்டுமே தேர்வாகி இருக்கின்றனர்.

மேலும் இந்த வேலையை பொறுத்தவரையில் ஆண்கள் மட்டுமே செய்யக் கூடியது என கருதி வந்த ஒரு தருணத்தில் பெண்களும் சமமாக இறங்கியுள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த நவம்பர் 25 ஆம் தேதி தொடங்கிய உடல் தகுதி தேர்வு வரும் 12ஆம் தேதி முடிவடைய இருக்கிறது. இதில் மொத்தம் 1170 பேர் உடல் தகுதி தேர்வுக்கு வந்து உள்ளனர். அதில் 337 பேர் தேர்வாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோன்று இதுவரை வந்த 61 பெண்களில் உடற்பயிற்சி தேர்வில் தகுதி பெற்ற ஒரே பெண் என்றால் அது ஜோதி என்பது குறிப்பிடத்தக்கது. அவர் எப்படி கம்பத்தில் வேகமாக ஏறுகிறார் என என்று நீங்களே பாருங்கள்