சுப ஸ்ரீ - பேனர் விபத்து போன்றே... மதுரையில் சிக்கிய மற்றொரு இளம்பெண்..! நூலிழையில் உயிர்தப்பிய அதிர்ஷ்டம்..! 

மதுரை பெரியார் மேம்பாலத்தில் இருந்து இருசக்கர வாகனத்தில் வந்த இளம்பெண் ஒருவர் அதிர்ஷ்டவசமாக விபத்திலிருந்து உயிர் தப்பிய புகைப்படம் ஒன்று வைரலாக பரவி வருகிறது.

மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள மேம்பாலத்தில் இருந்து இறங்கும் சாலையில் பேவர் பிளாக் கற்கள் பதிக்கப்பட்ட சிறு சாலை உள்ளது. இந்த நிலையில் நேற்று மாலை மதுரையில் நல்ல மழை பெய்து இருந்த நிலையில் பேவர் பிளாக் கற்கள் பதியப்பட்ட சாலையில் பயணிக்கும் போது சறுக்கல் ஏற்பட வாய்ப்பும் இருந்தது. 

இதனை கவனிக்காத இளம்பெண் ஒருவர் இருசக்கர வாகனத்தில் பயணித்த போது எதிர்பாராத விதமாக சறுக்கி கீழே விழுந்தார். அப்போது அருகே சென்று கொண்டிருந்த மாநகர பேருந்தின் முன் சக்கரத்தின் அருகே விழுந்த அப்பெண் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதுதவிர நிலைமையை உணர்ந்த பேருந்து ஓட்டுனர் உடனடியாக பிரேக் போட்டு பேருந்தை நிறுத்தினார். ஹெல்மெட் அணிந்திருந்தால் இப்பெண்ணிற்கு அடிப்படவில்லை. லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக  உயிர் தப்பிய அப்பெண்ணிற்கு முதல் உதவி செய்து வீட்டிற்கு அனுப்பி வைத்தனர் அப்பகுதி மக்கள்

நேற்று முன் தினம் சென்னை பள்ளிக்கரணையில் சுப ஸ்ரீ என்ற பெண் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக பேனர் அவர் மீது விழுந்ததில் அருகே வேகமாக வந்த லாரியின் சக்கரத்தில் சிக்கிக்கொண்டு சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் கண்முன்னே வந்து வந்து போகும் இந்த நேரத்தில் மீண்டும் மற்றொரு இளம் பெண் பேருந்து சக்கரத்தின் அருகே விழுந்து இருக்கும் இந்த புகைப்படம் பார்ப்பவரை ஒரு விதமான மன நிலைக்கு தள்ளுகிறது.