கோடம்பாக்கத்தில் சரத் ரவி என்பவர் கோல்டன் ரெட்ரீவர்  நாயை வளர்த்து வந்துள்ளார். இந்த நாயை திட்டமிட்டு கடத்தப்பட்டுள்ளதாக தற்போது காவல்துறையில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

உபெர் கால் டாக்சியில் ஒரு பெண் ஒரு ஆண் என இருவரும் திட்டமிட்டு நாயை கடத்தி சென்றதாக பாண்டி பஜார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஐந்து வயது மதிக்கத்தக்க ஜாக்கி என்ற அந்த ஆண் நாய் அனைவரிடமும் மிக எளிதாக பழகக்கூடியது.

மேலும் மாலை நேரத்தில் எஜமானர் சரத் ரவியின் வருகைக்காக தினமும் காத்திருக்குமாம்.இதனை சரியாக நோட்டமிட்ட ஒரு பெண் உபெர் கால் டாக்ஸி வைத்து நாயை கடத்தி சென்றுள்ளனர். மேலும் நாயை கடத்தப்பட்ட காட்சிகள் அப்பகுதியில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை வைத்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் நாயைக் கண்டு பிடித்தால் அதற்கான சன்மானம் வழங்கப்படும் என்றும் எஜமானர் சரத் ரவி தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

காசு பணத்திற்காகவும், முன்பகை  காரணமாகவும் முன்பெல்லாம் ஆள் கடத்தல் நடத்தப்படுவது கேள்விபட்டிருப்போம். ஆனால் தற்போது கால் டாக்சி வைத்து நாயை கடத்தி இருப்பது  ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.