காதல் என்ற பெயரில் நடந்து வரும் காம வெறி தாக்குதல் நிகழ்வும், தனக்கு கிடைக்காதவள் வேறு யாருக்கும் கிடைக்க கூடாது என்ற காம வெறி எண்ணமும் ஒரு மனிதனுக்கு வரும் போது காதல் என்ற மகத்துவமான ஒரு விஷயம் காம வெறி ரூபத்தில் பல கொடூர செயல்களில் ஈடுபடுத்த வைக்கிறது.

அதற்கு உதாரணமாக,இன்று கேரளாவில் நடந்துள்ள ஒரு சம்பவத்தை சொல்லலாம். கேரள மாநிலம் பத்தனம்திட்டா என்ற பகுதியில் காதலை ஏற்க மறுத்ததால் 19 வயது பெண்ணை நடுரோட்டில் வைத்து பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளான் ஒரு இளைஞன்.


 
திருவல்லா என்ற இடத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பயின்று வரும் 19 வயதான அந்த பெண்ணிடம் வழிமறித்து திடீரென மறைத்து வைத்திருந்த பெட்ரோல் கேனை திறந்து அந்த பெண் மீது ஊற்றி நெருப்பை பற்ற வைத்துள்ளான் அஜின் ரெஜி மேத்யூ என்ற இளைஞன்.

பின்னர் அருகில் இருந்த  நபர்கள் தண்ணீர் ஊற்றி நெருப்பை அனைத்து உள்ளனர். இருந்தாலும் 60 சதவீத பெரும் தீக்காயத்துடன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார் அந்த பெண். இது குறித்து விசாரணை மேற்கொண்டதில், இவர்கள் இருவரும் கடந்த 2 வருடங்களாக நண்பர்களாக பேசி பழகி வந்ததும், ஒரு கட்டத்தில் இளைஞனுக்கு அது காதலாக மாற, வெளிப்படுத்தி உள்ளன அஜின் ரெஜி மேத்யூ. 

ஆனால், அப்பெண் காதலை ஏற்க மறுத்து அவருடன் பழக தயக்கம் காண்பிக்கவே,  தனக்கு கிடைக்காத அப்பெண் வேறு யாருக்கும் கிடைக்க கூடாது என பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளான். இது போன்ற சம்பவங்கள் ஆங்காங்கு நடந்து வருகிறது. இதற்கு பின்னனியில் ஏன் இது போன்ற செயல்களில் ஆண்கள் ஈடுபடுகிறார்கள் என்று ஆராயும் போது, காதல் என்ற போர்வையில் ஒளிந்திருக்கும் காமம் தான் அனைத்திற்கும் காரணம் என்பது அனைவராலும் உணர முடியும் என்றே கூறலாம்.