ஆசிட் வீசிய காதலி..! வெந்துபோன காதலன் முகம்...! அதிர்ச்சி பின்னணி என்ன..?                                                        

வேறு ஒரு பெண்ணுடன் பழகுகிறான் என தன் காதலனை சந்தேகப்பட்டு அவர் மீது ஆசிட் வீசிய காதலியை போலீசார் கைது செய்துள்ளனர்.

டெல்லியில், 24 வயதான ஒரு வாலிபர் தனது காதலியுடன் இருசக்கர வாகனத்தில் பயணித்துள்ளார். அப்போது தன்னுடன் வந்த காதலி வேகமாக செல்ல சொல்லியிருக்கிறார். பயணத்தின் போது காதலன் அணிந்திருந்த ஹெல்மெட்டையும் கழற்ற சொல்லி உள்ளார். பின்னர் அடுத்த 5 வினாடிகளில் அவர் முகத்தில் ஆசிட் வீசப்பட்டு உள்ளது. பின்பக்கமாக அமர்ந்திருந்த காதலியின் முகத்திலும் ஆசிட் வீசப்பட்டு உள்ளது.

இதுகுறித்து போலீசில் புகார் தெரிவித்து, வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் அடையாளம் தெரியாத நபர் ஒருவரால் ஆசிட் வீச்சுக்கு ஆளாகி உள்ளார்கள் என குறிக்கப்பட்டிருந்தது. ஆனால் காதலிக்கு மிகக் குறைந்த அளவிலேயே ஆசிட் வீச்சு இருந்ததால், சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை செய்துள்ளனர். பின்னர் அவர் திடுக்கிடும் தகவலை தெரிவித்துள்ளார்.

"தன் காதலன் சில நாட்களாக தன்னிடம் சரிவர பேசவில்லை என்றும்... இதனால் அவர் வேறு ஒரு பெண்ணிடம் பழகி வருவதாக  சந்தேகத்தின் பேரில், ஆசிட் ஊற்ற முயற்சி செய்தேன்" என குறிப்பிட்டு உள்ளார். இந்த விவகாரம் டெல்லியில் மேலும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது. பின்னர் இந்த பெண்ணை கைது செய்து சிறையில் அடைத்தனர்.