அஞ்சலகத்தில் உள்ள பல்வேறு திட்டங்களை பற்றி நம்மில் பல பேருக்கு தெரிவதில்லை .

அஞ்சலகத்தில் உள்ள பல்வேறு திட்டங்களை பற்றி நம்மில் பல பேருக்கு தெரிவதில்லை. வங்கியில் கணக்கு தொடங்கு வதற்கு முன்னால் மட்டுமே தபால் நிலையங்களை அணுகி அதில் உள்ள பல திட்டங்கள் முதல் சேமிப்பு கணக்குகளை பராமரித்து வந்தனர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

ஆனால் இந்த நிலை தற்போது இல்லை என்றே கூறலாம். காரணம் அனைவருமே வங்கி கணக்கு வைத்திருப்பத்தே.. அதே சமயத்தில் வங்கியை விட, தபால் நிலையத்தில் நல்ல பல திட்டங்கள் உள்ளது.

அதில் ஒன்று...

சுகன்யா சம்ரிதி அக்கவுண்ட் ( sukanya samriddhi account )

நம்ம ஊரில் இந்த திட்டத்தை "செல்வ மகள் சேமிப்பு திட்டம் என்று பெயர். இந்த திட்டத்தில் மேற்கொள்ளப்படும் முதலீடுகளுக்கு 8.1 சதவீத வட்டி வழங்கப்படும்

1000 ரூபாய் முதல் ரூ. 1,50,000 ஆயிரம் வரை எவ்வளவு வேண்டுமானாலும் முதலீடு செய்துக்கொள்ளலாம்.

10 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளின் பெயரில் மட்டும் தான் இந்த கணக்கு வைக்க முடியும்.

அப்பெண் 21 வயதை அடையும் வரை மாதம் தோறும் ஒரு குறிப்பிட்ட தொகையை இந்த கணக்கில் செலுத்த வேண்டும்

திருமண செலவுக்காக பெரிய தொகை தேவைப்படுவதாலும்,மேற்படிப்பு போன்றவற்றிக்கு இந்த பணம் பெரிதும் பயனுள்ளதாக இருக்கும்

இந்த திட்டம் மூலம் குழந்தைகளுக்கு சிறு வயதிலிருந்தே சேமிக்கும் பழக்கத்தை வளர்க்க செய்யலாம்.மேலும், சிறுக சிறுக பணத்தை சேர்த்து வைத்தால்,ஒரு நாள் அது மலை போல் பெரிதாக தெரியும். சரியான சமயத்தில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் இந்த திட்டம் பெண் குழந்தை பெற்ற பெற்றோர்களுக்கு பெரிதும் பயனுள்ளதாக உள்ளது.