அதிர்ச்சி..! 7500 ரூபாய்க்கு ஆண் குழந்தை..! பெற்றெடுத்த அடுத்த நொடியே பிசினஸ் டீல் செய்த அக்காவின் கணவர்..!  

கோவை சூலூர் பகுதியில் வசித்து வந்த பெண் ஒருவருக்கு பிறந்த ஆண் குழந்தையை ரூபாய் 7500 க்கு விற்பனை செய்த நபரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் வசித்து வந்த திருமணமாகாத 22 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கர்ப்பமாக இருந்துள்ளார். இவருக்கு அரசு மருத்துவமனையில் கடந்த 6 ஆம் தேதி ஓர் ஆண் குழந்தை பிறந்து உள்ளார். குழந்தை பிறந்த  உடனே அப்பெண் எதிர்பாராத விதமாக உயிரிழந்தார். 

இதனை தொடர்ந்து அந்தப் பெண்ணின் அக்கா கணவர், இறந்த பெண்ணின் உடலை ஆம்புலன்ஸ் மூலம் மயிலாடுதுறைக்கு அனுப்பி வைத்து குழந்தையை தன் வீட்டிற்குக் கொண்டு வந்து உள்ளார். பின்னர் தன் வீட்டின் அருகே வசிக்கும் செல்வி-ராஜன் தம்பதியினருக்கு 7500  ரூபாய்க்கு குழந்தையை விற்று உள்ளனர். குழநதையை பெற்றுக்கொண்ட இந்த தம்பதியினர்
திருப்பூர் மாவட்டத்திலுள்ள அவிநாசி பாளையத்தில் வசிக்கும் அவர்களுடைய  உறவினர்களிடம் குழந்தையை கொடுத்து வளர்த்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த விவரம் கோவை உக்கடம் சைல்டு லைன் அமைப்பிற்கு தெரியவரவே காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் குழந்தைக்கு யார் தந்தை என்ற கோணத்திலும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகினர் காவலர்கள்.