தெருவில் விட்ட உயர்ரக நாய்...! 

சென்னைக்கு அடுத்து உள்ள மாங்காட்டில், தெருவில் நடந்து சென்ற சிறுமியை வளர்ப்பு நாய் ஒன்று கடித்ததில் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

மாங்காட்டில் உள்ள ஸ்ரீராமஜெயம் தெருவைச் சேர்ந்த 12 வயது சிறுமி கீர்த்தனா என்பவர், கடைக்கு செல்வதற்காக அப்பகுதியில் நடந்து சென்றுள்ளார். அப்போது அதே தெருவில் வசித்து வரும் சுகந்த் என்பவர் வளர்த்து வந்த உயர் ரக நாய் ஒன்று கீர்த்தனாவை கடித்து குதறி உள்ளது. 

பின்னர் சிறுமியின் அலறல் சப்தம் கேட்ட பிறகு அக்கம் பக்கத்தினர் ஓடோடி வந்து சிறுமியை மீட்டு, சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இந்த உயர் ரக நாயை முறையாக பராமரிக்காததால் தான் இந்த அசம்பாவிதம் நடந்து உள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

முறையான பராமரிப்பு இல்லாமல் ராட் வில்லர் நாயை வளர்த்தது மட்டுமின்றி நாயின் குணம் அறிந்த உரிமையாளர் ஏன் இவ்வளவு அசால்டாக தெருவில் விட்டுள்ளார். குடி இருக்கும் இடத்தில், அடித்த வீட்டிற்கு சப்தம் கேட்டாலே சண்டைக்கு வந்து விடுவார்கள்... இங்கு என்ன வென்றால், பொதுமக்கள்  செல்லும் பொது வழியில் கூட இது போன்று பொறுப்பே இல்லாமல் நாயை கழட்டி விட்டு வேடிக்கை பார்த்து உள்ளாரா ஓனர் ? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கான சரியான நடவடிக்கை சுகந்த் மீது பாயுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.