இந்திய ரயில்வேயில் லெவல் - 1 பிரிவில் 1,03769 பணியிடங்கள் காலியாக உள்ளத்தால் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அதில் சென்னையில் மட்டும் 9579 இடங்கள் நிரப்பப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

work shop, locvo shed, pointsman, signal and telecom, உள்ளிட்ட 17 பணிகளுக்கான காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இந்த வேலையை பெற ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி ஏப்ரல் 14, 2019 
  
தேர்வு கட்டணம் செலுத்த கடைசி தேதி 23.4.19..!  

கணினி வழி தேர்வு நடைபெறும் மாதம் செப்டம்பர் மற்றும் அக்டோபர் 2019 

வயது வரம்பு : 18 முதல் அதிகபட்சமாக 33 வரை..

பொதுப்பிரிவினருக்கு ரூ.500, மற்றும் உத்தரவு பிரிவினருக்கு ரூ.250 தேர்வு கட்டணமாக  நிர்ணயம் செய்யப் பட்டு உள்ளது 

கல்வித்தகுதி :

10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிந்தால் போதும் அல்லது ஐடிஐ படிப்பை முடித்திருக்க வேண்டும். அதே வேளையில் கல்லூரியில் கடைசி ஆண்டு படிக்கும் நபர் இந்த தேர்விற்கு விண்ணப்பிக்க முடியாது. ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை www.rrcmas.in என்ற இளையதள பக்கத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம்.

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு கணினி வழி தேர்வு மற்றும் உடற்கல்வி தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ரயில்வே துறையில் வேலை செய்ய வேண்டும் என்ற கனவில் இருப்பவர்களுக்கு இது ஒரு அறிய வாய்ப்பாக இருக்கும் என்பதில் எந்த மாற்றமும் இருக்காது. 

ஏசியாநெட்டின் வாழ்த்துக்கள்...!