பொதுவெளியில் 9 மணி நேரம் ஆபாச படம் ஒளிபரப்பு..! அதிர்ந்து போன பொதுமக்கள்..! 

நியூசிலாந்து நாட்டில் பிரபல கடையில் தொடர்ந்து 9 மணி நேரமாக ஆபாச படம் ஒளிபரப்ப பட்டதால் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நியூசிலாந்து நாட்டில் உள்ள மிகப்பெரிய பிரபலமான நகரம் ஆக்லாந்து. இங்கு பிரபல நிறுவனத்திற்கு சொந்தமான "ஷூ" கடை ஒன்று உள்ளது. இந்த கடையில் விளம்பரத்திற்காக தினந்தோறும் புதுப்புது வீடியோக்களை ஒளிபரப்பபடுவது வழக்கம்.

கடை மூடப்பட்ட பிறகும் இரவு நேரங்களில் வீடியோ பிளே ஆகிக்கொண்டே இருக்கும். இந்த நிலையில் கடந்த சனிக்கிழமையன்று  ஆபாச காட்சிகள் ஒளிபரப்பப்பட்டு உள்ளது. அப்போது அந்த வழியாக சென்றவர்கள் முகம் சுளிக்கும் வண்ணம் இந்த காட்சிகள் அமைந்தது. அதில் ஒரு சிலர் திட்டிக்கொண்டே கடையை கடந்து செல்வதும், ஒரு சிலர் நின்று வேடிக்கை பார்ப்பதுவுமாக இருந்துள்ளது.

பின்னர் காலை நேரத்தில் ஊழியர்கள் வந்து பார்க்கும் போதுதான், அவர்களுக்கு இந்த விஷயம் தெரிய வந்துள்ளது. உடனடியாக உள்ளே சென்று ஒளிபரப்பை நிறுத்தி உள்ளனர். மேலும் எவ்வாறு இந்த தவறு நடந்தது என்பது குறித்து தெரியவில்லை. எங்கள் கவனத்திற்கு இது வரவில்லை. இது குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளனர்.மேலும் இது தொடர்பாக பொதுமக்களிடம் மன்னிப்பும் கேட்கப்பட்டு உள்ளது.