தடுமாறும் "அமெரிக்கா"...!  ஒரே நாளில் 884 பேர் உயிரிழப்பு ..!

உலகம் முழுவதும் தற்போது கொரோனா தாக்கம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த ஒரு நிலையில் வல்லரசு நாடான அமெரிக்காவில் ஒரே நாளில் 884 பேர் உயிரிழந்தது பெரும் ஏற்படுத்தி உள்ளது.

அந்த வகையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளில் அதிகம் பாதித்த நாடாக அமெரிக்கா உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதன் படிகொரோனா தொற்று பாதிப்புக்கு கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் அதிகபட்சமாக 884 பேர் உயிரிழந்துள்ளதாக ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தகவல் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 

இதுவரை அமெரிக்காவில் மட்டும் 5,116 பேர் உயிரிழந்து உள்ளனர். மேலும் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 25 ஆயிரம் பேருக்கு கொரோனா தோற்று ஏற்பட்டு உள்ளதால் இதுவரை 215,417 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இதில் உற்று கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், கொரோனா பாதித்த நாடுகளில் ஏற்பட்ட இறப்பு விகிததாய் விட அமெரிக்காவில் அதிக இறப்பு விகிதம் ஏற்பட்டு உள்ளது. நிலைமையை சமாளிக்க முடியாமல் அமெரிக்கா திணறி வருகிறது. தொடர்ந்து நோய் தோற்று அதிகரித்து வருவதும், இறப்பு விகிதமும்  அதிகரிப்பதால் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து யோசித்து வருகிறது அமெரிக்கா