மனைவியின் டார்ச்சரிலிருந்து தப்பிக்க புத்திசாலித்தனமாக யோசித்த கணவர், அவருக்கு காது கேட்கவில்லை என கூறி கடந்த 62  வருடங்களாக மனைவியை ஏமாற்றி வந்துள்ளார். தற்போது உண்மை தெரியவரவே, விவாகரத்து கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளார் மனைவி.

அமெரிக்காவின் கனெக்டிகட் பகுதியில் வசித்து வருபவர்கள் பாரி டவ்சன், 84 வயதான இவருக்கு இன்றளவும் நன்றாகவே காது கேட்கிறது. இவர் மனைவி டோரத்தி வயது 80. டோரத்திக்கு வயது 18 இருக்கும் போதே திருமணம் செய்துள்ளனர். பின்னர் அடிக்கடி கருத்து வேறுபாடு இவர்களுக்குள் வந்துள்ளது. எனவே விவாகரத்து வாங்க வேண்டாம், அதே சமயத்தில் சேர்ந்து வாழ வேண்டும் என்பதற்காக புத்திசாலித்தனமாக யோசித்த கணவர் அவருக்கு காது கேட்காத மாதிரி நடித்து வந்துள்ளார்.

பின்னர் சைகை மொழம் புரிய வைத்து அவருடன் வாழ்க்கை நடத்தி வந்துள்ளார் மனைவி அப்போதும், சில பிரச்சனை வரவே, கண்கள் சரியாக தெரியவில்லை என கூறி அவ்வப்போது எதை சொன்னாலும் கண்டுக்கொள்ளாமல் இருந்துள்ளார்.

அவரது மனைவி மட்டுமல்லால் அவருடைய நண்பர்கள், உறவினர்கள்  அவ்வளவு ஏன் அவர்கள் பெற்ற பிள்ளைகளுக்கே இப்போது தான் உண்மை தெரிய வந்துள்ளது.

இந்த நிலையில் தான், சமீபத்தில் அவர் ஒரு நிகழ்ச்சியில்  கலந்துகொண்ட போது எதிர்பாராத விதமாக உணர்ச்சிவசப்பட்டு பாடி உள்ளார். இந்த வீடியோவை யூடியூப் பதிவேற்றம் செய்ய, இதனை மனைவி பார்க்க... அது எப்படி கரோக்கி இசையை கேட்டு தலையை ஆட்டியபடி பாரி டவ்சன் பாடியுள்ளார் என சந்தேகம் வர ...
அவ்வளவு தான்.. இத்தனை ஆண்டு காலமாக தன்னுடனே இருந்து தன்னை ஏமாற்றி உள்ளாரே என்ற கோபத்தில், மனம் உடைந்து விவாகரத்து கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளார் மனைவி.

இந்த தம்பதியினருக்கு, 6 பிள்ளைகள், 13 பேரன், பேத்திகள் உள்ளனர். அவர்கள் அனைவருமே பாரி டவ்சன்னை காது கேளாதவர் என்றே நினைத்துள்ளனர். இது குறித்து டவ்சன் வழக்கறிஞர் ராபர்ட் தெரிவிக்கும் போது 'டவ்சன், தன் மனைவியின் இடைவிடாத போச்சு மற்றும் சண்டையிலிருந்து தப்பிக்கவே 62 ஆண்டுகளை தியாகம் செய்துள்ளார் என்று வாதாடி உள்ளாராம். தீர்ப்பு என்ன வருகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்