ரமலான் நோன்பு நேரத்தில் சாப்பிட்டவர்களுக்கு நேர்ந்த சோகம்..!

இஸ்லாமியர்களும் கிறிஸ்தவர்களும் அதிக அளவில் வாழக்கூடிய  இடம் மேற்காப்பிரிக்க நாடான நைஜீரியா.

இங்கு இஸ்லாமிய ஷரியத் சட்டத்திருத்தங்களை நடைமுறையில் உள்ளது. இந்த விதிகளுக்கு உட்பட்டு தான் மக்கள் அங்கு வாழ முடியும். ஒரு வேளை ஷரியத் திட்டங்களை மீறினால், அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவது வழக்கம். ஷரியத் திட்டங்களை மீறும் நபர்களை கண்காணிக்க ஹிஸ்பா எனப்படும் அமைப்பின் மூலம் காவலர்கள் பணியில் அமர்த்தப்பட்டு உள்ளனர்.

இந்நிலையில், ரமலான் நேரத்தில் விதியை மீறி பொது இடத்தில் உணவை உண்ட 80 கும் அதிகமான நபர்களை போலீசார் கைது செய்து, பின்னர் சில நாட்களுக்கு பின் எச்சரிக்கை விடுத்தனர்

இந்த நிலையில், கானோ மாநிலத்தில் ரமலான் நோன்பு காலத்தில் பொது இடத்தில் உணவு சாப்பிட்டதாக 80 பேரை போலீசார் கைது செய்தனர். கடந்த சில நாட்களாக கைது செய்யப்பட்ட இவர்கள் அனைவரும் மாலைவரை காவலில் வைத்து, எச்சரித்து விடுவிக்கப்பட்டனர்.