8 Highly Effective Business Success Tips for Entrepreneurs
என்ன தான் ஒரு நிறுவனத்தில் வேலை செய்து லட்சம் ருபாய் சம்பளம் வாங்கினாலும், தானாக ஒரு தொழில் தொடங்கி அதில் ஆயிரம் ரூபாய் சம்பாதித்தால் அதில் கிடைக்கும் சந்தோசமே தனி தான்.
அப்படி தான் எல்லோருமே தொழிலில் வெற்றி கோடிஸ்வரர்களாக வேண்டும் என நினைக்கிறார்கள்? அப்படி செய்ய என்ன செய்ய வேண்டும்? என கோடிஸ்வரர்களே சொன்னால் எப்படி இருக்கும்.

இதோ உங்களுக்காக சில டிப்ஸ்...
"சந்தோசமான கஸ்டமர்கள்"
உங்கள் தொழிலை நீண்டநெடும் துர்ரம் கொண்டு செல்ல ஆசைப்பட்டால் “சந்தோசமான கஸ்டமர்கள்” என்பதே தாரக மந்திரம். கஸ்டமர்கள் இல்லாமல் வெற்றிகிரமான தொழில் சாத்தியமில்லை, அவர்களை கையாளவேண்டுமென்பதை தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள்.
"தோல்வியில் இருந்து கற்றுக்கொள்ளுங்கள்"
வெற்றி பெற்றால் கொண்டாடுவதைப்போல, தோல்வி அடைந்தால் நாம் ஏன் தோல்வியடைந்தோம் என்று ஆராய்ந்து அதில் இருந்து தவறுகளை திருத்திக்கொள்ளவேண்டும்.

"குறுக்குவழியை தேடாதிர்கள்"
வெற்றியின் முதல்படி புறப்படு, போராடு, வெற்றி பெறு இதை தவிர்த்து பணக்காரன் என்பது உங்களை ஒரு போதும் வெற்றியை நோக்கி அழைத்து செல்லாது. ஒரே நாளில் விக்ரமன் படத்தில் வருவதைப்போலவும், ரஜினி படத்தில் ஒரே பாடலில் கோடீஸ்வரனாக மாற்றாது.
"துல்லியத்தை கணக்கீடாதீர்கள்"
நீங்கள் செய்யும் வேலையை துல்லியமாக கணக்கிடாதீங்க.. நீங்க செய்யவிருக்கும் வேலையே செய்து முடிக்கணும் என்பதை விட வெற்றியை நோக்கி புறப்படுங்கள்.
"விரும்பி செயல்படுங்கள்"
பணத்திற்காக செய்யும் தொழில், சில நாளில் புளித்துவிடும். பணத்திற்க்காக மட்டுமே தொழிலை செய்யாதீர்கள். உங்கள் தொழிலை நேசித்து செய்து பாருங்கள். அதை வெளிப்பாடு மிகச் சிறப்பானதாகும்.
"தொழில் தொடங்குகள்"
நீங்கள் வாழ்வில் வெற்றி பெற புதிய வழியை தேடுங்கள். பலர் பயணித்த வெற்றி வழிகளை பின்பற்றாதீர்கள். அப்போது உங்களுக்கு புதிய எதிர்பாராத அனுபவம் கிடைக்கும்.
உங்களை நிறுத்த நீனைகாதீர்கள்
வாழ்கையில் ரிஸ்க் எடுக்காமல் இருப்பது தான் பெரிய ரிஸ்க். தோல்வியை நினைத்து பயப்படுவதே தோல்வி தான். முடிந்த வரை மின்னேறி செல்லுங்கள். கடின முடிவுகளை எடுங்கள். கட்டாயம் வெற்றி உங்களுக்கு தான்.

"நேரத்தை ஒதுக்குங்கள்"
நீங்கள் தொழில், வீடு, மனைவி, குழந்தை என அனைவருக்கும் நேரத்தை செலவிட கற்றுக்கொள்ளுங்கள். வெற்றி உங்களை தேடி தானாக வரும்.
