7 கோடிபேர் வேலை இழக்கும் அபாயம்!  H1-B விசா மூலம் அமெரிக்கா சென்றவர்கள் நிலை என்ன?

சீனாவில் ஆரம்பித்த கொரோனா என்ற கொடூர சூறாவளி தற்போது உலக மக்கள் அனைவரையும் வாட்டி வதைத்து வருகிறது. உலகம் முழுவதும் 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், 53 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். உலகின் வல்லரசு நாடுகளும் கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் திணறி வரும் நிலையில், பெரும்பாலான நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டாலும் உலகம் இரண்டாம் உலக போரை விட மிகப்பெரிய பொருளாதார இழப்பை சந்திக்கும் என்று ஐ.நா. எச்சரிக்கை விடுத்துள்ளது. அந்த பொருளாதார சரிவு முதலில் பதம் பார்க்க உள்ளது இந்தியர்களின் வேலை வாய்ப்பை தான் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா பாதிப்பு காரணமாக அமெரிக்காவில் பணியாற்றும் இந்தியர்களில் 5 பேர் ஏற்கனவே வேலை இழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதே போல் வேலை இழப்போரின் எண்ணிக்கை இம்மாத இறுதிக்குள்  7 கோடியை தாண்டும் என்றும் அதிர்ச்சி அளிக்கின்றனர்.

H1-B விசா மூலம் அமெரிக்காவிற்கு வேலைக்கு செல்பவர்களில் 67 சதவீதம் பேர் இந்தியர்கள். தற்போது கொரோனா காரணமாக வணிக வளாகங்கள், கடைகள் மட்டுமின்றி பெரும் நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன. அதனால் அமெரிக்கர்களை விட இந்தியர்கள் வேலை இழக்கும் அபாயம் அதிகரித்துள்ளதாக பகீர் தகவல் வெளியாகியுள்ளது.

நிலைமை இப்படி இருக்க, சடலங்களை அடுக்குவதற்கு 1 லட்சம் பிளாஸ்டிக் பைகளை ஆர்டர் செய்துள்ளது அமெரிக்க ராணுவம். மேலும் ஒரு லட்சம் பை- களுக்கும் ஆர்டர் கொடுப்போம் என அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.