மாறி வரும் உணவு பழக்கத்தால், நம்மில் பல பேரும் உடல்பருமன் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனையை சந்தித்து வருகின்றனர்.அதிக உடல் எடையால் பெரும் அவதிக்குள்ளாகும் பலர், ஜிம் போவது, மருத்துவமனை சென்று மருத்துவர்களின் ஆலோசனைப்படி மருந்து மாத்திரை என சிகிச்சை எடுத்துக்கொள்வதுமாக செல்கிறது.

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க எப்படி, மிக எளிதாக நம் உடல் எடையை குறைக்க முடியும் என்பதை பார்க்கலாம்.

கிரீன் டீ

பால் காப்பி அருந்துவதற்கு பதிலாக, கிரீன் டீ குடித்து வந்தால் உடல் எடை வெகுவாக குறைகிறது என பல்வேறு கட்ட ஆய்வில் தெரிய வந்து உள்ளது.

காபி

காபியை பெரும்பாலோனோர் விரும்பி எடுத்துக்கொள்வார்கள். காபியில் கெபைன் உள்ளதால், இது உடல் எடையை விரைவாக குறைக்கும். கிரீன் டீ போன்றே, ப்ளாக் டீ குடித்து வந்தால் உடல் எடை குறைகிறது என  ஆய்வில் தெரிய வந்து உள்ளது. 

தண்ணீர்

இதே போன்று வெறும் தண்ணீர் அருந்துவதாலும் உடை எடை வெகுவாக  குறையும் என்பது குறிப்பிடத்தக்கது. அதில் மிக முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால், உணவு அருந்தும் முன்பாக அரை லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்... இந்த பழக்கத்தை சில மாதங்கள் முயற்சி செய்து பாருங்கள். நல்ல மாற்றத்தை உணர முடியும் 

ஆப்பிள் சிடர் வினிகர் பானம்

இதில் அசிடிக் ஆசிட் உள்ளதால் நல்ல ஜீரா சக்தியை அதிகரிக்கும், தேவை இல்லாத கொழுப்பை கரைய செய்யும், விரைவாக பசி எடுப்பதை தடுக்கும். அதே போன்று செரிமானத்தை அதிகரிக்க செய்யும். இதன் செயல்பாட்டால், உடல் எடை சீராக வைத்துக் கொள்ள முடியும்.

இஞ்சி டீ

இஞ்சி டீ பொதுவாகவே மூக்கடைப்பு உள்ள போதும், சளி இருமல்  உள்ளபோதும் எடுத்துக்கொள்வார்கள். இந்த இஞ்சி டீ உடல் எடையை  குறைக்க பெரிதும் உதுவுகிறது.

ஹை புரோடீன் பானம் 

புரோடீன் ட்ரிங்க்ஸ் பருகினால், அவ்வளவு எளிதில் பசி எடுக்காது. எனவே உணவு கட்டுப்பாடு நமக்கு இருக்கும்... உணவு கட்டுப்பாட்டோடு புரோடீன் ட்ரிங்க்ஸ் எடுத்துக் கொள்வதால் தேவை இல்லாமல் உடலில் எடை  கூடுவதை தவிர்க்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

வெஜிடேபல் ஜூஸ் 

இதே போன்று..... வெஜிடேபல் ஜூஸ் தினமும் எடுத்துக்கொண்டால்.. நம்ம உடலுக்கு தேவையான அனைத்து சத்துகளும் வந்து சேரும்.. தேவை இல்லாத பிரச்சனை வராது... நல்ல ஆரோக்கியமாகவும் நம்மை வைத்துக் கொள்ள முடியும்.. எடையும் குறையும் அல்லது உடலை சீராக வைத்துக் கொள்ள முடியும்.