வரும் நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் இந்த தருணத்தில் 687 போலி கணக்குகளை நீக்கியுள்ளது பேஸ்புக் நிறுவனம்.

போலி கணக்குகள் மூலம் சமூகவலைதளங்களில் போலியான செய்திகள் அவதூறு பரப்புவது மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்துவது உள்ளிட்ட நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த போலி கணக்குகளையும் முகநூல் பக்கத்தையும் அதிரடியாக நீக்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பேஸ்புக் நிறுவனத்தின் இணையதள பாதுகாப்பு கொள்கை வகுக்கும் குழுவின் தலைவர் நதேனியல் கிளிட்சர் விளக்கத்தைக் கொடுத்துள்ளார்.
 
அதன்படி, "காங்கிரஸ் கட்சியுடன் தகவல் தொழில்நுட்ப பிரிவு உடன் தொடர்புடைய தனிநபர் கணக்கு மற்றும் முகநூல் பக்கங்கள் தங்களுடைய அடையாளங்களை மறைத்து செய்திகளை பரப்பி ரவந்துள்ளனர். அவர்கள் அவர்களுடைய அடையாளங்கள் மறைக்கப்பட்டாலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மூலம் அந்த கணக்குகள் ஆய்வு செய்து நீக்கப்பட்டு உள்ளது.

இத்தனை பக்கங்களையும் முடக்குவதற்கு காரணம் அவர்களது அடையாளங்களை மறைத்து வைத்திருந்தே.இதுபோன்ற பக்கங்களில் உள்ளூர் செய்திகள் முதல் அரசியல் செய்திகள் மக்களவைத் தேர்தல் தொடர்பான செய்திகள் பாஜக உட்பட அரசியலில் எதிர் தரப்பினரை பற்றிய பல்வேறு விமர்சனங்களை வெளியிட்டு வந்துள்ளனர்.

இதனை ஆய்வு செய்த பிறகு அவர்கள் காங்கிரஸின் தகவல் தொழில்நுட்ப பிரிவுடன் தொடர்பு உள்ள தனிநபர் மற்றும் குழு என கண்டறியப்பட்டது இதில் முக்கிய காரணமாக தங்களது அடையாளங்களை மறைத்து முகநூலில் கணக்கு வைத்திருந்த காரணத்திற்காக மட்டுமே கணக்குகளையும் முடக்கினோம் என தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் பாகிஸ்தானில் உருவாக்கப்பட்ட103 பக்கங்களையும் தற்போது நீக்கி உள்ளோம்.

இந்த பக்கத்தில் ராணுவ செய்திகள் இந்திய அரசு பற்றிய செய்திகள் இந்திய அரசியல் தலைவர்கள் பற்றிய செய்திகள் என பல்வேறு அரசியல் தொடர்பான விமர்சனங்களே இடம் பெற்றிருந்தன. மேலும் பாகிஸ்தான் ராணுவத்தின் இன்டர் சர்வீஸ் பப்ளிக் ரிலேஷன் அமைப்புடன் இந்த கணக்குகள் தொடர்பு வைத்திருந்தது தெரியவந்தது எனவே இந்த கணக்குகளையும் அதிரடியாக நீக்கி உள்ளம் என குறிப்பிட்டுள்ளார்.