இந்த 6 ராசியினருக்கு இப்படி ஒரு நிலைமையா..? 

மேஷ ராசி நேயர்களே...!

இழுபறியாக இருந்து வந்த பல்வேறு வழக்குகள் சாதகமாக முடியும். கடந்த காலத்தில் உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் இப்போது உங்களுக்கு ஆதரவாக செயல்படுவார்கள்.

ரிஷப ராசி நேயர்களே...!

சவால்களில் வெற்றி பெறுவீர்கள். திருமணம் கைகூடி வரும். புதிய வாகனம் வாங்க திட்டமிடுவீர்கள். வீட்டை விரிவுபடுத்தி வேறுவிதமாக கட்ட முயற்சி செய்வீர்கள். பணவரவு எதிர்பார்த்த அளவுக்கு இருக்கும்.

மிதுன ராசி நேயர்களே....!

கடந்த காலத்தில் நடந்த பல இனிமையான சம்பவங்களை நினைத்து அடிக்கடி மகிழ்ச்சியாக இருப்பீர்கள். தாயாருடன் எதிர்பாராத வகையில் கருத்துவேறுபாடு வரலாம். வாகனத்தில் மெதுவாக செல்வது நல்லது.

கடக ராசி நேயர்களே...!

பிரச்சினைகளை சமாளிக்க புதிய வழி கிடைக்கும். வேற்று மொழி பேசுபவர்களின் அறிமுகம் உங்களுக்கு பல நன்மைகளை கொடுக்கும். புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள்.

சிம்மம் ராசி நேயர்களே..!

பணத்தட்டுப்பாடு எளிதில் நீங்கும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். விலகி இருந்த உறவினர்கள் உங்களை தேடி வந்து பேசுவார்கள்.

கன்னி ராசி நேயர்களே..!

மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மருந்தையும் எடுத்துக் கொள்ளக்கூடாது. கீரை வகைகளை எடுத்துக் கொள்ளலாம். பழைய நண்பரை சந்தித்து மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.