தமிழகத்தில் பாஜக மலர்ந்தே தீரும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் எப்போதுமே நம்பிக்கையாக தெரிவிப்பது உண்டு.

அதுமட்டுமல்லாமல், ஆரம்ப காலம் முதலே தமிழகத்தில் பாஜக வலுவான கூட்டணி அமைக்கும் என தொடர்ந்து பேசி வந்தார். அதற்கேற்றவாறு நாளுக்கு நாள் பாஜகவிற்கு தமிழகத்தில் ஆதரவு பெருகி வருகிறது. மேலும், பாமக மற்றும் அதிமுக உடன் கூட்டணி வைத்து விட்டது பாஜக. இந்த நிலையில் மேலும் தேமுதிகவும் அதிமுக இணைய வாய்ப்பு உள்ளது என்ற கருத்தும் நிலவி வருகிறது.

இந்த நிலையில் இன்று தமிழகம் முழுவதும், 26-2-2019 இன்று மாலை 6 மணிக்கு மீண்டும் மோடி! வேண்டும் மோடி!! என்ற பிரார்த்தனையுடன் நாடு முழுவதும் நரேந்திரமோடியின் ஆதரவாளர்கள், அபிமானிகள், தொண்டர்கள் வீடுகளில் தாமரைக் கோலமிட்டு அதில் அழகிய தீபம் ஏற்றி உள்ளனர்.

இதற்கான புகைப்படம் கீழே :

2

3

4

5

6

7