மலச்சிக்கலுக்கு வாழைப்பழம் தான் தீர்வுனு நினைச்சிட்டு இருக்கீங்களா? அதை விட இது தான் பெஸ்ட்..முயன்று பாருங்க!!
Foods for Constipation : நீங்கள் மலச்சிக்கல் பிரச்சனைகள் அவதிப்படுகிறீர்கள் என்றால், அதற்கான தீர்வு என்ன என்பதை குறித்து பார்க்கலாம்.
இன்றைய மோசமான வாழ்க்கை முறை மற்றும் தவறான உணவு பழக்க வழக்கங்களால் பெரும்பாலானால் மலச்சிக்கல் பிரச்சனைகள் அவதிப்பட்டு வருகின்றனர். நீண்ட காலமாக மலச்சிக்கல் பிரச்சனை இருந்தால் அது எதிர்காலத்தில் ஆரோக்கியத்தை மோசமாக பாதிக்கும் தெரியுமா? இதனால் உணவு ஜீரணிப்பதில் சிரமம் எடை அதிகரிப்பு போன்றவை ஆகும். மலச்சிக்கல் பிரச்சனையைப் போக்க உணவில் சில மாற்றங்களை செய்வது மிகவும் அவசியம். குறிப்பாக, நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உணவில் அதிகம் சேர்ப்பதால் மலச்சிக்கலை பெருமளவு குறைக்கலாம். எனவே, மலச்சிக்கலை எளிதில் போக்க எந்தெந்த உணவுகளை சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பதை குறித்து இன்றைய கட்டுரையில் நாம் பார்க்கலாம்.
இதையும் படிங்க: கொலஸ்ட்ராலை குறைக்க அவதிப்படுறீங்களா..? அத்திப்பழத்தை இப்படி சாப்பிடுங்க.. ஈஸியா குறைக்கலாம்..!
மலச்சிக்கல் பிரச்சினையை போக்க வழிகள்:
1. நார்ச்சத்து நிறைந்த உணவுகள்: மலச்சிக்கல் பிரச்சனையை போக்க நார்ச்சத்து நிறைந்த உணவுகள் உணவில் அதிகம் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது. உதாரணமாக காய்கறிகள் முட்டைக்கோஸ், உருளைக்கிழங்கு, வெண்டைக்காய், கேரட் போன்றவற்றை உங்கள் உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள். அதே சமயம் பழங்களில் ஆப்பிள், வாழைப்பழம், ஆரஞ்சு, திராட்சை மற்றும் மாதுளை ஆகியவை அடங்கும்.
2. உங்களை நீரேற்றமாக வைத்துக் கொள்ளுங்கள்: தினமும் உடலுக்கு தேவையான அளவு தண்ணீர் குடிப்பதன் மூலம் மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து பெருமளவு நிவாரணம் கிடைக்கும். மேலும் இது உணவை செரிமானத்திற்கு உதவுகிறது. இதனால் மலச்சிக்கல் பிரச்சனை வராமல் தடுக்கப்படுகிறது. எனவே, தினமும் குறைந்தது 3 லிட்டர் தண்ணீராவது கண்டிப்பாக குடியுங்கள்.
3. பருப்பு வகைகள் மற்றும் தானியங்கள்: புரத நார்ச்சத்து நிறைந்த பருப்பு வகைகளை உங்களுக்கு உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். உதாரணமாக, மைசூர் பருப்பு, உளுந்து, கொண்டை கடலை போன்றவையகும். இவற்றில் பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இவை மலச்சிக்கல் பிரச்சனையை நீக்கும். அதுமட்டுமின்றி, தினை, சம்பா அரிசி, ஓட்ஸ் போன்ற முழு தானியங்களிலும் நார்ச்சத்து நிறைந்துள்ளதால், இவற்றையும் உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். இது செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது. இதனால் மலச்சிக்கல் பிரச்சினை தடுக்கப்படும்.
4. தயிர் மற்றும் சீஸ்: குடல் ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகிறது. எனவே, தினமும் உணவில் தயிர் எடுத்துக் கொள்ளுங்கள். கூடுதலாக செரிமானத்தை மேம்படுத்த உதவும்.
5. உலர் பழங்கள்: உலர் பழங்களான திராட்சை, அத்திப்பழம் போன்றவற்றில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இவை மலச்சிக்கலை போக்க பெரிதும் உதவுகிறது.
6. விதைகள்: சியா விதைகள் மற்றும் ஆளி விதை போன்ற விதைகளில் நார்ச்சத்து அதிகமாகவே உள்ளது. இவையும் மலச்சிக்கலை போக்க முக்கிய பங்கு வகிக்கிறது.
இதையும் படிங்க: பப்பாளி பழத்தை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா..? அவசியம் தெரிஞ்சிகோங்க..