Asianet News TamilAsianet News Tamil

கெட்டுப்போன இறைச்சி அழுகிய நிலையில் பறிமுதல்..! ஆஹா ஒஹோன்னு சாப்பிடும் போது நினைவில் கொள்க..!

வாகனத்தில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்து இருந்தனர்.இதனை தொடர்ந்து சுகாதாரத்துறை அதிகாரிகளும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளும் விரைந்து வந்து சோதனை நடத்தியதில் 200 கிலோ கெட்டுப்போன ஆட்டு இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது. 

500 kg motton  destroyed in chennai
Author
Chennai, First Published Mar 6, 2020, 5:48 PM IST

கெட்டுப்போன இறைச்சி அழுகிய நிலையில்  பறிமுதல்..! ஆஹா ஒஹோன்னு சாப்பிடும் போது நினைவில் கொள்க..! 

நாம் உண்ணும் உணவே கலைப்பிட உணவு. அதிலும் சுகாதாரம் இல்லாமல் இருந்தால் நம் உடலுக்கு நன்மை பயக்க  வில்லை என்றாலும் தீமை  செய்து விட கூடாது என்பதே...ஆனாலும்  இது  போன்ற  தருணத்தில் பலவேறு  உணவகங்களில் தூய்மையற்ற உணவு பொருட்களை வழங்குவது என்பது மக்கள் வைக்கும் நம்பிக்கைக்கு உலை வைப்பதாகும் 

அந்த வகையில் அசைவ பிரியர்களுக்கு  எல்லாம் பேரத்திற்கு கொடுக்கும் விதமாக சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் 500 கிலோ கெட்டுப் போன ஆட்டு இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. 

இந்த பகுதியில் உள்ள சாலை ஒன்றில் நின்று கொண்டிருந்த வாகனத்தில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்து இருந்தனர்.இதனை தொடர்ந்து சுகாதாரத்துறை அதிகாரிகளும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளும் விரைந்து வந்து சோதனை நடத்தியதில் 200 கிலோ கெட்டுப்போன ஆட்டு இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது. 

அதன் பிறகு,அருகே பதுக்கி வைக்கப்பட்டிருந்த மேலும் 300 கிலோ கெட்டுப்போன ஆட்டு இறைச்சியை அதிகாரிகள் கைப்பற்றி குப்பைக் கிடங்குக்கு எடுத்துச்சென்று அழித்தனர். இதன்மூலம் இந்த இறைச்சி எங்கிருந்து கொண்டு வரப்பட்டது? மீந்துபோன இறைச்சியா  அல்லது இதனை மீண்டும் பயன்படுத்துவதற்கு எடுத்துச் சென்றார்களா? என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios