ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் 50% இட ஒதுக்கீடு...! முதல்வர் அதிரடி....! 

ஆந்திர முதல்வராக பதவியேற்றுள்ள ஜெகன்மோகன் ரெட்டி நாளுக்கு நாள் பல அதிரடி திட்டங்களை அமல்படுத்தி வருகிறார். அதன்படி தற்போது விவசாயத் துறையில் ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் 50 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்ற அற்புத அறிவிப்பை வெளியிட்டு பெண்களின் மனதில் தனி இடத்தை பிடித்துள்ளார் ஜெகன்மோகன் ரெட்டி.

கடந்த மே மாதம் பெரும்பான்மை பெற்று ஆந்திரத்தில் ஆட்சியை பிடித்த ஜெகன்மோகன் ரெட்டி பதவி ஏற்ற நாள் முதல் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். சமீபத்தில் ஒரே நேரத்தில் 1.26 லட்சம் நபர்களுக்கு அரசு பணி ஆணை வழங்கி ஒட்டுமொத்த இந்தியாவையும் தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தார். பின்னர் வீடு தேடி செல்லும் ரேஷன் பொருட்கள் திட்டம் உள்ளிட்ட பல்வேறு நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

படிக்கும் மாணவர்களுக்கு மாதம் 2000 ரூபாய் வரை உதவித்தொகை பெறும் திட்டத்தையும் அமல் படுத்தி உள்ளார். இந்தநிலையில் விவசாயத்துறையில் சந்தை குழு தலைவர்களை நியமனத்தில் பெண்களுக்கு 50 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதன்மூலம் ஆண்களுக்கு நிகராக பெண்கள் பணி வாய்ப்பை பெறுவார்கள்  என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த துறையில் பணியாற்ற பெண்களுக்கு அழைப்பு விடுத்து நேர்காணல் நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.