- Home
- Lifestyle
- Uric Acid : யூரிக் அமில பிரச்சினை இருந்தா இந்த '4' பருப்பு வகைகளை சாப்பிடாதீங்க! நிலைமை மோசமாகிடும்
Uric Acid : யூரிக் அமில பிரச்சினை இருந்தா இந்த '4' பருப்பு வகைகளை சாப்பிடாதீங்க! நிலைமை மோசமாகிடும்
யூரிக் அமில பிரச்சனை உள்ளவர்கள் சில வகையான பருப்பு வகைகளை சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். அவை என்னென்ன என்று இங்கு பார்க்கலாம்.

Lentils That Increase Uric Acid
சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தம் போல யூரிக் அமில பிரச்சனையால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் இன்றைய காலத்தில் வேகமாக அதிகரித்து வருகின்றது. அதுவும் இந்த பிரச்சனையானது வயதானவர்கள் விட இளைஞர்களிடம் தான் அதிகமாக காணப்படுகிறது. உடலில் யூரிக் அமிலம் அதிகரிக்கும் போது மூட்டு வலி, வீக்கம், நடப்பதில் சிரமம், கீழ்வாதம் போன்ற எலும்பு தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட தொடங்கும்.
Avoid Lentils For High Uric Acid
இப்படிப்பட்ட சூழ்நிலையில் பியூரின்கள் அதிகம் உள்ள உணவுகளை சாப்பிட்டால் இரத்தத்தில் யூரிக் அமிலத்தின் அளவு அதிகரிக்கும். உதாரணமாக காளான், காலிஃபிளவர், பச்சை பட்டாணி, குளிர்பானங்கள், சிவப்பு அரிசி போன்றவற்றை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். மேலும் சில பருப்பு வகைகளையும் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இல்லையெனில் அவை யூரிக் அமில அளவை அதிகரிக்கும். எனவே, யூரிக் அமில பிரச்சனை உள்ளவர்கள் எந்தமாதிரியான பருப்பு வகைகளை சாப்பிடக் கூடாது என்று இங்கு பார்க்கலாம்.
உளுந்தம் பருப்பு :
உளுந்தம் பருப்பில் புரதம் மற்றும் அமினோ அமிலங்கள் நிறைந்துள்ளதால் இது யூரிக் அமில அளவை அதிகரிக்க செய்யும். எனவே யூரிக் அமில பிரச்சனை உள்ளவர்கள் உளுந்தம் பருப்பு உணவில் எடுத்துக் கொள்ளும் முன் ஒரு முறை மருத்துவரிடம் ஆலோசனை கேட்பது நல்லது.
மைசூர் பருப்பு :
இதில் அதிக அளவு நார்ச்சத்து, புரதம், மற்றும் பல்வேறு வைட்டமின்கள், தாதுக்கள் இருக்கிறது. மேலும் இதில் பியூரின்கள் அதிகமாக உள்ளதால் அவை உடலில் யூரிக் அமில அளவை அதிகரிக்க செய்யும். எனவே யூரிக் அமில பிரச்சனை உள்ளவர்கள், மூட்டு வலி போன்ற அறிகுறிகள் உள்ளவர்கள் இந்த பருப்பை தவிர்ப்பது ரொம்பவே நல்லது.
பாசிப்பருப்பு :
உங்களுக்கு ஏற்கனவே யூரிக் அமில பிரச்சனை இருந்தால் நீங்கள் பாசிப்பருப்பு சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இதை அதிகமாக உட்கொள்வது பியூரின் உருவாகுவதற்கான அபாயத்தை அதிகரிக்கும் என்று சொல்லப்படுகிறது.
ப்ளாக் பீன் :
இந்த ப்ளாக் பீன் புரதம், நார்ச்சத்து, ஃபோலேட் ஆகியவற்றின் நல்ல மூலமாக கருதப்பட்டாலும் இதில் பியூரின்கள் அதிகமாக உள்ளதால் அவை உடலில் யூரிக் அமிலத்தை அதிகரிக்க செய்யும். எனவே யூரிக் அமில பிரச்சனை உள்ளவர்கள் இதை சாப்பிட வேண்டாம்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

