தாய் அடித்ததில் பரிதாபமாக உயிரிழந்த 5 வயது சிறுமி...! நாமக்கலில் பரபரப்பு...!

திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூர் என்ற பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வரும் நித்திய கமலா என்பவருக்கு ஐந்து வயதில் ஒரு மகள் உள்ளார். ஐந்து வயதான லத்திகா ஸ்ரீ எப்போதும் சுட்டித்தனமாக டிவி பார்ப்பதில் ஆர்வமாக இருப்பாராம்.

இந்நிலையில் ஏன் எப்போதும் டிவி பார்த்துக் கொண்டே இருக்கிறாய்? அதிக அடம்பிடிக்கிறார் என தாய் கோபப்பட்டு குழந்தையை சற்று வேகமாக அடித்துள்ளார். இதில் எதிர்பாராதவிதமாக குழந்தை மயக்கம் அடைந்து உள்ளது. திடீரென குழந்தை மயக்கம் அடைந்து விட்டதை பார்த்து பதறிய தாய் நித்திய கமலா நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். 

அப்போது அங்கு முதலுதவி அளிக்கும் போதே சிறுமியின் உடலில் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படாத நிலை இருந்துள்ளது. பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு சிறுமியை கொண்டு சென்றனர். ஆனால் துரதிஸ்டவசமாக சிகிச்சை பலனின்றி சிறுமி லத்திகா ஸ்ரீ உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.