ஆண்களுக்கு சிறப்பு சக்தியை கொடுக்கும் 5 கீரைகள்...!

https://static.asianetnews.com/images/authors/fb8d4d14-0372-5b95-af41-84d4a15f3aeb.jpg
First Published 4, Feb 2019, 8:28 PM IST
5 special green leafy  for gents health
Highlights

ஒவ்வொரு நாளும் பம்பரமாய் சுற்றி திரியும் நமக்கு ஆரோக்கியமான உணவை எடுத்துக் கொள்வதில் அந்த அளவிற்கு ஆர்வமும் அக்கறையும் காட்டுவதில்லை என்றே எடுத்துக்கொள்ளலாம்.  
 

ஆண்களுக்கு சிறப்பு சக்தியை கொடுக்கும் 5 கீரைகள்...! 

ஒவ்வொரு நாளும் பம்பரமாய் சுற்றி திரியும் நமக்கு ஆரோக்கியமான  உணவை எடுத்துக் கொள்வதில் அந்த அளவிற்கு ஆர்வமும் அக்கறையும்  காட்டுவதில்லை என்றே எடுத்துக்கொள்ளலாம்.  

ஒரு பக்கம் சரியான தூக்கம் இல்லாமை,சரியான ஊட்ட உணவு உண்ணாமை,எப்போதும் செல்போனில் வாழ்கை நடத்துவது,மன அழுத்தம் வேலைப்பளு என தொடர்ந்து மன நிம்மதி இல்லாமல் இருப்பது.இது போன்ற பல காரணங்களால் தாம்பத்ய வாழ்கை கூட பெருமளவு பாதிக்கிறது.

இதன் காரணமாக தம்பதிகள் இருவருக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடைசியில் விவாகரத்து வரை செல்கின்றனர்.சரி இப்ப விஷயத்துக்கு வரலாம்... மேற்குறிப்பிட்ட காரணத்தினால், ஆண்களுக்கு ஆண்மை குறைவு பிரச்சனை அதிகரித்து வருகிறது. உண்மையில் மற்ற பிரச்சனைகளை விட இந்த பிரச்சனை தான் பெரும் பிரச்சனையே அல்லவா..?

இதற்கெல்லாம் தீர்வு காணும் விதமாக சித்தர்கள வகுத்துள்ள உணவு முறைகளை காணலாம் வாங்க. "நறுந்தாளி நன்முருங்கை, தூதுவளை, பசலை,வாளிளறு கீரை நெய்வார்த்துண்ணில் யாழி என விஞ்சுவார் போகத்தில்பெண்களெல்லாம் பின்வாங்கி கேள்"

அதாவது நறுந்தாளி என்பது தாளிகீரை,நன்முருங்கை என்பது முருங்கை கீரை, தூதுவலை,பசலை கீரை,அரைகீரை.இந்த ஐந்து வகை கீரைகளை பசு நெய் ஊற்றி சமைத்து உண்டு வர யாழி என்ற விலங்கின் பலம் உடலுக்கு கிடைக்கும் என சித்தர்கள் குறிப்பிட்டு உள்ளனர். தாளிக்கீரை என்பது வேலிகளிலும், சிறு காடுகள் ஆகியவற்றில் காணப்படும் ஒரு கொடியினம்.இது உடல் சூட்டை முற்றிலும் அகற்றும்.

குறிப்பாக காமம் பெருக்கும் வல்லமை படைத்த கீரை இது என்பது குறிப்பிடத்தக்கது.மேலும், இதன் இலை மட்டுமே அப்படி ஒரு மருத்துவ குணம் கொண்டது என்றால் பாருங்களேன். உள் உறுப்புகளில் ஏற்படும் புண்,அலர்சி,வாய்புண் சிறுநீர் பாதையில் தோன்றும் நோய்கள், விந்தணு குறைபாடு ஆகியவை ஏற்படாது

தோல் நோய்க்கு மிக சரியான கீரை இதுவே. இந்த கீரையை அரைத்து தினமும் தலை முதல் கால வரை தேய்த்து வர உடல் அரிப்பு இருக்காது. தோல் தொடர்பான நோய்கள் வராது. சருமம மிகவும் பளப்பளப்பாக மாறும்.

loader