கணவன் மனைவி "டைவர்ஸ்" வாங்க 5 முக்கிய காரணம் இது தான்..! 

திருமணமான தம்பதியரிடையே சண்டை வருவது என்பது இயல்பே. ஆனால் அந்த சண்டை எதற்காக இவ்வளவு நேரம் நீடிக்கிறது? அதற்காக இருவரும் பேசாமல் இருப்பது... சில நாட்கள் மௌனம் காப்பது... என இருந்தால் கண்டிப்பாக அவர்களுக்குள் பெரிய பிளவு ஏற்பட வாய்ப்பு உண்டு. அதற்கெல்லாம் நாம் இடம் கொடுக்கக் கூடாது என்பதை உணர்ந்துகொண்டு வாழ்க்கையின் முக்கியத்துவத்தை தெரிந்து கொண்டு அதற்கேற்றவாறு செயல்படுவது திருமண வாழ்க்கையின் மிக முக்கியமான ஒன்று.

அந்த வகையில் தன் துணைவர் கடைசி வரை நம்முடன் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதை புரிந்து கொள்ளுதல் வேண்டும்.

சண்டை 

முதலாவதாக எந்த ஒரு சண்டையாக இருந்தாலும், அன்றைய தினம் உறங்க செல்லும் முன் சமாதானம் ஆகி இருவரும் பேசிக்கொள்வது நல்லது. ஒர இரவு முழுவதும் பேசாமல் இருந்தால் மறுநாள் அப்படியே தொடர தோன்றும். அப்படி ஒரு நிலைமை வந்தால் இருவருக்குள்ளும் பெரிய மனக்கசப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே எப்படி ஒரு பிரச்சினையாக இருந்தாலும் அன்று இரவே மீண்டும் சமாதானமாகி பேசி விடுவது நல்லது.

ஒரு சில காரணங்களுக்காக தன் துணையுடன் எதையும் சொல்லாமல், பேசாமல் இருப்பது மிகவும் ஆபத்தில் போய் முடியும் என்று நாம் சொல்லலாம். பெரிய கோபமோ.. வருத்தமோ.. கொஞ்ச நேரம் அமைதியாக இருந்துவிட்டு, பின்னர் மீண்டும் பேசுவதே நல்லது.

திருமணமான சில நாட்களில் மட்டும் அன்பை பரிமாறி கொள்வதும், முத்தம் கொடுப்பதும், பாசமாக பேசுவதுமாக இருந்துவிட்டும், பின்னர் முத்தம் கொடுப்பதும் கிடையாது... பாசமாக பேசுவதும் கிடையாது.. என வாழ்க்கை தொடர்ந்தால் தன் துணைக்கு மனதளவில் பெரிய பாதிப்பை ஏற்படுத்திவிடும். எனவே மனம் விட்டு பேசுவது நல்லது.

துணைவருக்கு முன்னுரிமை கொடுப்பதில் எப்போதும் கவனமாக இருக்க வேண்டும். நம்மை விட்டு யார் சென்றாலும் தன் துணை மட்டுமே கடைசி காலம் வரை உடன் இருப்பவர் என்பதை புரிந்து கொண்டு, எப்போதுமே அவருக்கு துணையாக நில்லுங்கள்.

தன் கணவர் மீதோ அல்லது  மனைவி மீதோ சந்தேகப்பட்டு அவரை பின்தொடர வேண்டாம்.  அதற்கு பதிலாக அவர்கள் மீது சந்தேகம் இருப்பின் நேரடியாகவே எதுவாக இருந்தாலும் கேள்வி கேட்டு சமாதானம் ஆவது சிறந்தது. இல்லை என்றால் மன உளைச்சலுக்கு ஆளாகி இருவருக்கும் கருத்து வேறுபாடு பின்னர் விவாகரத்து என சென்று விடும். எனவே இதுபோன்ற விஷயங்களுக்கு இடம் கொடுக்காமல் நடந்து கொள்வது சிறந்தது.