இஸ்லாம் மக்களுக்கு கல்வியில் 5% ஒதுக்கீடு..! அமைச்சர் அதிரடி..! 

இஸ்லாம்  மாணவர்களுக்கு 5 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் புதிய மசோதா விரைவில் மாநில சட்டசபையில் கொண்டுவரப்படும் என மராட்டிய அமைச்சர் தெரிவித்துள்ளது வரவேற்பை பெற்று  உள்ளது

மராட்டிய மாநிலத்தில் ஆளும் மகா விகாஸ் அகாதி கூட்டணியில், இருக்கும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ நவாப் மாலிக், சிறுபான்மை விவகார அமைச்சராக இருக்கிறார். 

மராட்டிய மாநிலத்தில் கல்வி நிறுவனங்களில் முஸ்லிம்களுக்கு 5 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் புதிய மசோதா விரைவில் மாநில சட்டசபையில் அறிமுகப்படுத்தப்படும் என சிறுபான்மை விவகார அமைச்சர் நவாப் மாலிக் தெரிவித்து உள்ளார் 

மேலும் நீதிமன்ற உத்தரவு இருந்தபோதிலும், பாஜக மற்றும் சிவசேனா கட்சி கூட்டணியில்  இருந்ததால் இஸ்லாம் மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதில் தாமதம் ஏற்பட்டு வந்தது.ஆனால் முஸ்லிம்களுக்கு வேலைகளில் இடஒதுக்கீடு வழங்க திட்டமிட்டுள்ளதாகவும் அதற்கான ஆலோசனையை அரசாங்கமும் கேட்டு உள்ளதாக தெரிவித்து உள்ளார்.

எனவே வரும் சட்டசபை பட்ஜெட் முடிவில் இஸ்லாம் மக்களுக்கு கல்வியில் 5 சதவீதம் இட ஒதுக்கீட்டை பெற முடியும் என தெரிவித்து உள்ளார்