கொரோனா - அடுத்த அதிர்ச்சி தகவல்..! வெவ்வேறு நாட்டில் வெவ்வேறு வடிவம்..!

கொரோனா வைரஸ் பற்றி சோதனை செய்ததில் 40 மாறுபட்ட வடிவங்களை கொண்டது இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து உள்ளனர். உலக நாடுகளை பெரும் அளவுக்கு பாதித்து வரும்  கொரோனாவைரஸ் குறித்து ஆய்வு மேற்கொண்ட ஐஸ்லாந்தில் 600க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 2 பேர் பலியாகி உள்ளனர் 

இந்த ஆய்வில்,கொரோனா வைரஸ் அடுத்தடுத்த தலைமுறைக்கு பரவும் 40 மாறுபட்ட வடிவம் கொண்டு இருப்பதாக ஐஸ்லாந்தில் சுகாதார அதிகாரிகள், மரபியல் நிறுவனமான டிகோட் மரபியல் உடன் இணைந்து, 9,768 பேரை கொரோனா வைரஸுக்காக பரிசோதித்ததாக தகவல் தகவல்கள் உள்ளது 

இவர்களின் படி, டி.என்.ஏவில் ஒற்றை அடிப்படை அலகுகளை மாற்றுவது அல்லது மரபணுக்கள் அல்லது குரோமோசோம்களின் பெரிய பிரிவுகளை நீக்குதல், செருகுவது அல்லது மறுசீரமைப்பதன் காரணமாக அடுத்தடுத்து வேறு தலைமுறைக்கு மாற கூடிய நிலைமை ஏற்பட்டு உள்ளது 

இந்த வைரஸ் மனித உடலை தாக்கும் முன்பாக, வேறு விலங்குகளால் கூட சில ஆண்டுகள் பதுங்கி இருந்து இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஒரு நபர் கொரோனா வைரஸின் இரண்டு வகைகளை கொண்டுள்ளார். மற்றொருவரின் உடலில் கலப்படமான பல வகை வடிவங்கள் இருந்துள்ளது. இதன்மூலம் சுமார் 365,000 பேர் வசிக்கும் தீவு தேசமான ஐஸ்லாந்தில் வைரஸ் எவ்வாறு நுழைந்தது என சோதனை செய்ய்யப்பட்டவர்களில் 'சிலர் ஆஸ்திரியாவிலிருந்து வந்திருப்பதாகவும், சிலர்  இத்தாலியில் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து மற்றொரு வகை வந்துள்ளது.

அதே போன்று இங்கிலாந்தில் பாதிக்கப்பட்டவர்களில் மூன்றாவது வகை வைரஸ் காணப்படுகிறது. அவர்களில் 7 பேர் கால்பந்து போட்டியை காண சென்றவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது குறித்து இன்னும் அதிகார பூர்வ அறிவிப்பு வெளியாக வில்லை என்றாலும், அனைத்து நாடுகளுமே கொரோனா பற்றின ஆய்வில்  ஈடுபட்டு உள்ளதால் பல விஷயங்கள் மேலும் மேலும் வர தொடங்கி உள்ளது