நாடு முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்ட ஹோலி பண்டிகையில் சில இடங்களில் விபத்துகளும் ஏற்பட்டு உள்ளது. அதில் குறிப்பாக தமிழகத்தில் சென்னை திருச்சி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஹோலி சிறப்பாக கொண்டாடப்பட்டது.

சென்னை எழும்பூர் போலீஸ் கமிஷனர் அலுவலகம் பின்புறம் உள்ள ஒரு சாலையில் தனியாருக்கு சொந்தமான ஒரு இடத்தில் ஹோலி பண்டிகை கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் 500க்கும் மேற்பட்ட நபர்கள் கலந்து கொண்டு ஹோலி பண்டிகையை கொண்டாடினர். அதில் ஒரு பகுதியாக ஒரு நீச்சல் குளத்தில் கலர் பொடியை தூவி விட்டு அதில் இறங்கி விளையாடும் விதமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்போது திடீரென மின் கசிவு ஏற்பட்டதால்  தொட்டியில் இருந்த ஒரு சிறுவன் உள்பட நான்கு பேர் தூக்கி வீசப்பட்டனர். பின்னர் உடனடியாக மின் இணைப்பை நிறுத்தினர்.

இதுகுறித்து வேப்பேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மின்சாரம் தாக்கியதில் நான்கு பேரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஹோலி பண்டிகை இன்று இதே போன்ற சம்பவம் மேலும் சில இடங்களில் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.