தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு இன்று முதல் 4 நாட்களுக்கு விடுமுறை அளித்து பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. 

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு இன்று முதல் 4 நாட்களுக்கு விடுமுறை அளித்து பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. நவம்பர் 16ம் தேதி முதல் 9, 10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கலாம் என தமிழக அரசு அறிவித்திருந்தது. ஆனால் இந்த முடிவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்காக நடத்தப்பட்ட பெற்றோர் கருத்து கேட்பு கூட்டத்திலும், பெரும்பாலானோர் பள்ளிகளை திறக்க வேண்டாம் என கூறியதாகவே தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து பள்ளிகள் திறப்பை ஒத்திவைப்பதாக தமிழக அரசு அறிவித்தது. ஆன்லைன் வகுப்புகள் வழக்கம் போல் நடைபெறும் என்றும் தெரிவித்தது. ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வரும் நிலையில், தீபாவளி பண்டிகையையொட்டி மாணவர்களுக்கு இன்று முதல் நான்கு நாட்களுக்கு விடுமுறை அளித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. நான்கு நாட்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படாது என்றும் தெரிவித்துள்ளது.