உதயநிதி அன்பில் ஸ்டாலின்..! வலையில் சிக்கிய 3 சூப்பர் செல்பி..! 

நாளை மார்ச் 1 ஆம் தேதி, திமுக தலைவர் ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் புகைப்பட கண்காட்சி வைக்கப்பட்டு உள்ளது. இந்த கண்காட்சியில் ஸ்டாலின் அவர்களின் 20 வயது புகைப்படங்கள் முதல் தற்போது வரை உள்ள புகைப்படம் வரை இடம் பெற்று உள்ளது.

குறிப்பிட்டு சொல்ல வேண்டிய சில புகைப்படம் என்றால், தன் தாயாருடன் ஸ்டாலின் எடுத்துக்கொண்ட படம் முதல், கலைஞர் இறப்பின் போது கண்ணீர் விட்டு அழும் படங்கள் வரை இடம் பெற்று உள்ளது.  

இதற்கிடையியே புகைப்பட கண்காட்சியை பார்வையிட்டார் ஸ்டாலின். அப்போது அவரது உருவ படத்திற்கு அருகில் நின்று அவரே, செல்பி எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெகுவாக பகிரப்பட்டு வருகிறது.

அவர் மட்டுமல்லாமல், உதயநிதி ஸ்டாலின், திமுக சட்டமன்ற உறுப்பினர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்டோரும் ஸ்டாலின் உருவ படத்திற்கு அருகில் நின்று செல்பி எடுத்துக்கொண்டனர். மேலும் பொதுமக்களும் ஆர்வமாக ஸ்டாலின் புகைப்பட கண்காட்சியை பார்வையிட்டு, ஆசையாக போட்டோ எடுத்து சென்றனர். 

நாளை மார்ச் 1 ஆம் தேதி பிறந்த நாள் என்றாலும்,நேரில் வந்து வாழ்த்து தெரிவிக்க வேண்டாம் என தொண்டர்களுக்கு அன்பு கட்டளையிட்டுள்ளார் ஸ்டாலின். மாறாக, 40 தொகுதியிலும் வெற்றி பெற அயராது போராடுவதே எனக்கு கிடைக்கும் பிறந்தநாள் பரிசு என்றும், கலைஞர் இல்லாத இந்த தருணத்தில் பிறந்த நாள் கொண்டாட விருப்பம் இல்லை என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.