ஒரே குழந்தைக்கு சொந்தம் கொண்டாடும் 3 கணவர்கள்..! 

21 வயது சப்னா மைத்ரான என்ற பெண்ணிற்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த குழந்தைக்கு "நான்தான் அப்பா" என கூறிக்கொண்டு மூன்று இளைஞர்கள் மருத்துவமனையிலேயே சண்டையிட்டு உள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கொல்கத்தாவில் நிறைமாத கர்ப்பிணியான சப்னாவை ஒரு இளைஞர் மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். பிறகு அவருக்கு ஒரு பெண் குழந்தை பிறந்து உள்ளது. இதனை வாட்ஸ் ஆப்  ஸ்டேட்டஸ் ஆக வைத்துள்ளார் சப்னா. 

இதைப் பார்த்த ஹர்ஷா கேத்ரி என்ற நபர் மருத்துவமனைக்கு வந்து, தான்  "குழந்தையின் அப்பா தான்" என கூறியுள்ளார். இதனால் குழம்பிப்போன மருத்துவமனை நிர்வாகம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது. பின்னர் ஹர்ஷா திருமண சான்றிதழையும் காண்பித்து உள்ளார். பின்னர் மருத்துவமனையில் சப்னாவை அனுமதிக்க உதவி செய்த நபர் யார் என்ற பாணியில்  விசாரணை செய்ததில், அவர் சப்னாவின் நண்பர் என தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் பிரதீப் ராய் என்ற நபர் மருத்துவமனைக்குள் நுழைந்து நான் சப்னாவின் காதலன் என்றும், தனக்கு பிறந்ததுதான் அந்த குழந்தை என்றும் உரிமை கொண்டாட தொடங்கியுள்ளார். இதன் காரணமாக மூன்று பேருக்கும்மருத்துவமனையில் பெரும் சண்டை கிளம்பியுள்ளது. பின்னர் போலீசாரிடம் சப்னா தெரிவிக்கும் போது," திருமண சான்றிதழை சமர்ப்பித்த ஹர்ஷா தான் என் கணவர், மருத்துவமனையில் என்னை அனுமதித்தவர் என் நண்பர் என தெரிவித்து உள்ளார். ஆனால் பிரதீப் ராய் பற்றி எதையும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.