சென்னை விருகம்பாக்கத்தில் பொதுவாகவே நிறைய சினிமா நிறுவனங்கள் உள்ளன. அதே பகுதியில் சில போலியான நபர்கள் சினிமா நிறுவனம் என்ற பெயரில் வீடு வாடகைக்கு எடுத்து ஆடிஷன் வரும் பெண்களை தங்கள் வலையில் விழ வைத்து தவறான வழியில் ஈடுபட்டு உள்ளது தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக விபச்சார தடுப்பு பிரிவு போலீசாருக்கு கிடைத்த ரகசிய புகாரை அடுத்து விரைந்து வந்து போலீசார் நடத்திய சோதனையில், அங்கிருந்த 5 பேரை கைது செய்து உள்ளனர். அதன் படி ராஜபெருமாள், சுரேஷ், பாலாஜி என்ற மூவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அங்கிருந்த 2 பெண்களையும் காப்பகத்தில் சேர்த்து உள்ளனர்.

மேலும் இது போன்ற போலியான பெயரில் வேறு எங்காவது இதே போன்ற செயலில் ஈடுபட்டு வருகிறார்களா என்ற பல கோணத்தில் விசாரணை தீவிரபடுத்தி உள்ளனர்

பொள்ளாச்சி விவகாரம் சூடு பிடித்து உள்ள இந்த நிலையில் மேலும் பல இடங்களில் பல ஆண்டுகளாகவும்,மாதங்களாகவும் நடந்து வரும் பல கொடுமையான விஷயங்கள் தற்போது ஒவ்வொன்றாக வெளிவருகின்றன.