வயது பசங்க என்றால் அப்படிதான் இருப்பாங்கன்னு நம் வீட்டில் உள்ளவர்களே அவ்வப்போது பேசுவதை கேட்டு இருப்போம். அப்படிதான் இருப்பாங்க என்றால் எப்படி தெரியுமா..? பள்ளி கல்லூரி வாசலில் நின்றுகொண்டு, ரோட்டில் போகும் பெண்களை பார்ப்பதும் சைட் அடிப்பதுமாக இருப்பார்கள்.. இந்த காட்சி எல்லாம் படத்தில் நாம் பார்த்து இருப்போம்.. நிஜத்திலும் பார்த்து வருகிறோம்.

அந்த வகையில் தருமபுரி பேருந்து நிலையத்திற்கு அருகே உள்ளது அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி. பள்ளி விடும் நேரத்தில், சில இளைஞர்கள் காத்திருந்து பெண்கள் வரும் சமயத்தில் தனது பைக்கை எடுத்து சாகசம் செய்வதும், கிண்டல் செய்வதுமாக இருந்துள்ளனர். இதனை பார்த்த அப்பகுதி மக்கள் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, மாறு வேடத்தில் விரைந்து வந்த போலீசார், இளைஞர்கள் செய்யும் அட்டகாசத்தை பார்த்து உள்ளனர் 

பின்னர் பைக்கில் வந்த 3 இளைஞர்களையும் பிடித்து, விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது இந்த விஷயம் தீயாய் பரவவே.. இந்த பள்ளியின் வெளியே இளைஞர்கள் நடமாட்டம் பார்ப்பதே கொஞ்சம் கஷ்டமாக உள்ளதாம். தேவையா இதெல்லாம் நமக்கு..? சிந்தியுங்கள்..