3 தலை 4 கண்களுடன் பிறந்த அதிசய ஆட்டுக்குட்டி : ஆச்சர்யத்தில் ஈரோடு மக்கள்...!!!
ஈரோடிட்டில் உள்ள, டி. என் பாளையத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி , கூலி கூலித்தொழிலாளியான இவர் ஆட்டுகுட்டிகளையும் வளர்த்து வந்தார்.
இந்நிலையில் , தற்போது அவர் வளர்த்து வந்த ஆட்டு குட்டிகளில் , ஒரு ஆடு 2 குட்டிகளை ஈன்றது. அதில் ஒன்று இயல்பாகவும், மற்றொன்று பார்ப்பதற்கு அதிசயமாகவும் தோன்றியது.
அந்த குட்டி , மூன்று முகத்துடனும் , நான்கு கண்களை பெற்று காணப்படுகிறது.தலையின் நடுப்பகுதியில் இரண்டு கண்களும், பக்க வாட்டில் இரண்டு கண்களும் உண்டு .....
இந்த அதிசய குட்டியை பலரும் வந்து ஆச்சர்யத்துடன் பார்த்த வண்ணம் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
