மேஷ ராசி ..! 2020 புத்தாண்டு பலன் முழு விவரம்..! 

2020 ஆம் ஆண்டு பிறக்க இன்னும் 4 நாட்களே உள்ளது. அதற்குள் நம்முடைய ராசிக்கு என்ன பலன் இருக்கப் போகிறதோ என்ற எதிர்பார்ப்பு இப்பவே கிளம்பி உள்ளது அல்லவா..? இனி ஒவ்வொரு ராசிக்கும் 2010 புத்தாண்டு பலன் என்ன என்பதை விரிவாக பார்க்கலாம்.

மேஷ ராசி நேயர்களுக்கு...!

உங்கள் ராசிக்கு லாப வீட்டில் சந்திரன் நிற்கிறார். எனவே நீங்கள் வருங்கால திட்டத்திற்கு செய்யும் முயற்சிகள் அனைத்தும் ஆக்கப்பூர்வமாக இருக்கும். உங்களை தேடி சில முக்கிய பொறுப்புகள் வரும். சொந்த ஊரில் பெரிய ஆளாக மதிக்கப்படுவீர்கள். உங்களது வீட்டை விரிவுபடுத்த திட்டமிடுவீர்கள்.

இளைஞர்கள் பல சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். வரும் டிசம்பர் 26, 2020ஆம் ஆண்டு வரை ஒன்பதாம் வீட்டில் சனிபகவான் வலுவாக அமர்ந்திருப்பதால் சாதிக்கவேண்டும் என்ற எண்ணம் மேலோங்கி காணப்படும். எனவே குடும்ப வருமானத்தை உயர்த்த பல திட்டங்களை தீட்டுவீர்கள். பல அதிகார பதவியில் இருப்பவர்கள் உங்களுடன் சகஜமாகப் பழகுவார்கள். உங்கள் மகனுக்கோ மகளுக்கோ அயல்நாட்டு நிறுவனத்தில் வேலை கிடைக்கும்.

ஜனவரி ஒன்றாம் தேதி முதல் நவம்பர் வரை குருபகவான் அமர்ந்து இருப்பதால், இதற்கு முன்னதாக பலமுறை முயன்றும் முடிக்கப்படாத முக்கிய வேலைகள் எளிதாக முடித்துக் காட்டுவீர்கள். பல அரசியல்வாதிகளின் தொடர்பு உங்களுக்கு ஏற்படும். உங்களுடைய ஆலோசனையை மற்றவர்கள் கேட்கும் நிலை உருவாகும். உங்கள் வீட்டிலிருந்து 10 கிலோமீட்டர் தூரத்தில் கட்டாயம் ஒரு புது மனை வாங்க கூடிய யோகம் உருவாகும். வீடு கட்டி அங்கேயே செட்டில் ஆக கூட சிந்திப்பீர்கள்.

உங்களது தந்தை உங்களுக்கு உறுதுணையாக இருப்பார். உறவினர் வீட்டு விசேஷங்களை கூட முன்னின்று நடத்த கூடிய வாய்ப்பு கிடைக்கும். அதே வேளையில் நவம்பர் 13ஆம் தேதி வரை குரு உங்களுடைய ராசிக்கு பத்தாம் வீட்டில் நுழைவதால் அவ்வப்போது சில அவமானங்கள் ஏமாற்றம் வந்து போவது வழக்கமாக இருக்கும். கண்டிப்பாக இந்த ஆண்டில் வேறு யாருக்கும் சட்டத்துக்குப் புறம்பான விஷயங்களில் உதவ வேண்டாம். இந்த வருட பிறப்பு நேரத்தை பொருத்தவரையில் மூன்றாம் வீட்டில் ராகு இருப்பதால் திடீரென பணவரவு இருக்கும். ஒன்பதாம் வீட்டில் கேது இருப்பதால் தந்தையாருக்கு மருத்துவச் செலவு ஏற்பட வாய்ப்பு உண்டு.

ஆன்மீகவாதிகளின் ஆசி உங்களுக்கு கிடைக்கும். வரும் செப்டம்பர் மாதம் முதல் உங்கள் ராசிக்கு 2-ல் ராகுவும் எட்டில் கேதுவும் நுழைவதால் வாயை சற்று அடக்கி வாசிப்பது நல்லது. ஆனால் வேலைச்சுமை அதிகரிக்கும். நண்பர்களுடன் வீண் அலைச்சல், பணம் செலவு ஏற்படும். அக்டோபர் 25ஆம் தேதி முதல் நவம்பர் 17ஆம் தேதி வரை சுக்கிரன் ஆறாம் வீட்டில் இரு மறைவதால், கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடு மோதல், வாகன விபத்து  போன்ற சில சம்பவங்கள் நடைபெற வாய்ப்பு உண்டு. விளம்பர உத்திகளை கையாண்டு பழைய பொருட்களை எப்படியும் விற்றுவிடுவீர்கள். 

உங்கள் தொழில் தொடர்பாக வெளிமாநிலம் வெளிநாடு செல்ல நேரிடலாம். மொத்தத்தில் இந்த ஆண்டு ஏற்கனவே விரக்தியில் இருந்த உங்களை ஓரளவுக்கு வெற்றி ஆண்டாக கொண்டு செல்லும் என்பதை நம்பலாம்.