2018 new year predictions for taurus rasi
கார்த்திகை 2,3,4 பாதங்கள், ரோஹிணி, மிருகசீரிடம் 1,2பாதங்கள் ஆகிய நட்சத்திரங்களில் பிறந்த ரிஷப ராசிக்காரங்களே... உங்களுக்கு இந்தப் புத்தாண்டு எப்படி இருக்கும்? 2018 திங்கள் அன்று பிறக்கும் புத்தாண்டில் செவ்வாய்,சுக்ரன் சாதகமான நிலையில் இருக்க, ஆண்டின் துவக்கம் அமைந்திருக்கிறது.
இந்த நிலையில், உங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உங்களின் தேவைகள் யாவும் பூர்த்தி ஆகும். தொழிலில் மேன்மை உண்டாகும். குரு அதிசாரமாய் பிப்ரவரி 18 ஆம்தேதி முதல், விருச்சிகத்துக்கு செல்கிறது. இது, உங்களுக்கு சந்தோஷத்தையும் சாதகமான திருப்பங்களையும் தரும். குருவின் பார்வை பலத்தால், எதையும் சமாளிக்கும் ஆற்றல் உங்களுக்கு வந்துவிடும். கெடுதல் மறைந்து நன்மை உண்டாகும்.
ராகுவால் நன்மை உண்டு. பொருளாதார வளம் மேம்படும். சிலருக்கு வெளிநாட்டு யோகமும் உண்டு. கேதுவால் முயற்சிகளில் தடை ஏற்படக் கூடும். சனியின் 8ஆம் இடத்தால், அலைச்சல், மனத் தளர்ச்சி ஏற்படலாம். இருந்தாலும் கஷ்டம் அதிகம் இருக்காது.
நீங்கள் உங்கள் குடும்பத்தினருடன் ஒற்றுமையாய் இருப்பீர்கள். எல்லா விதமான செயல்களையும் குரு பார்வை பலத்தால் முடித்து வெற்றி காண்பீர்கள். அக்டோபர் 18 ஆம் தேதிக்கு பின்னர் சிறப்பான நிலைதான். சிலருக்கு வீடு வாகன யோகம் உண்டு. முயற்சிகளில் வெற்றி ஏற்படும்.
தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். கேதுவால் எதிரிகள் தொல்லை ஏற்படக் கூடும். பணியாளர்களுக்கு உடன் பணிபுரிவோரால் தொல்லைக்கு ஆளாகலாம். வேலை பளு அதிகம் இருந்தாலும் மேன்மை அடையலாம். பதவி உயர்வு சம்பள உயர்வு இவற்றை எதிர்பார்க்கலாம்.
கலைஞர்கள் சிரமப்பட்டு முன்னேற்றம் காண்பார்கள். அரசியல்வாதிகளும் கடுமையான முயற்சிக்கு பிறகே ஏற்றம் காண்பர். பணப்புழக்கம் இருக்கும்.
மாணவர்கள் போட்டி பந்தயங்களில் வெற்றி காண்பர். விவசாயிகளுக்கு வருமானம் சுமாராக இருந்தாலும், மாற்று பயிர்களால் நன்மை ஏற்படும். பெண்களுக்கு திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்வுகளுக்கு வாய்ப்பு உண்டு.
நீங்கள், சனீஸ்வரர், தட்சிணாமூர்த்தி, ஆஞ்சநேயருக்கு விளக்கு ஏற்றி வழிபட வேண்டும்.
